விஜய் டெலிவிஷன் 6வது ஆண்டு விருதுகள்

223

ஸ்டார் விஜய் நிகழ்ச்சிகளில் உங்களுக்கு பிடித்த நட்சத்திரங்கள் ஒன்றிணைந்து ஒரே மேடையில் தோன்றும் நிகழ்ச்சிதான் விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ்.

தமிழ் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான நிகழ்வுகளில் ஒன்றான விஜய் தொலைக்காட்சி விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் பெரியதாகவும் சிறப்பாகவும் நடக்கும்!

இந்த ஆண்டும் அது நடக்கவிருக்கிறது. ஒவ்வொரு ஞாயிறும் இனி கொண்டாட்டம் தான். வரும் ஞாயிறு முதல் விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ் நிகழ்ச்சியின் முன்னூட்டமாக பல நிகழ்ச்சிகள் உங்கள் அபிமான விஜய் டிவி நட்சத்திரங்கள் பங்குகொண்டு ஜொலிக்கவிருக்கிறன்றனர்.

ஸ்டார் விஜய் தனது நிகழ்ச்சிகளின் மூலம் இதுவரை கணக்கிலண்டன்கா நட்சத்திரங்களை பல துறைகளிலும் உருவாகியுள்ளது. அவர்கள் ஸ்டார் விஜய்யால் அறிமுகமாகி வெள்ளித்திரையில் நட்சத்திரங்களாக கோடி கட்டி பறக்கும் நடிகர்களாக இருந்துவருகின்றன. மேலும் பல நிகழ்ச்சிகளின் மூலம் சிறந்த பாடகர்கள் மற்றும் கலைஞர்களை உருவாக்கி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஸ்டார் விஜய் தொடர்களும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் நேயர்களின் மனதில் நீங்க இடம் பிடித்து வருகின்றது. அந்த நட்சத்திரங்களை கொண்டாடும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் விஜய் டெலிவிஷன் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றது.

இந்த ஆண்டும் இது தொடர்கிறது.

இந்த முறை விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ் நிகழ்ச்சியின் முன்னோட்டமாக ஒவ்வொரு ஞாயிறும் சிறப்பு நிகழ்ச்சிகள் வரும் மார்ச் 14 முதல் ஒளிபரப்பாகிறது.

முதல் நிகழ்வு மார்ச் 14 அன்று பரிவட்டம் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். மார்ச் 21 அன்று எங்கள் வீட்டு மகாலட்சுமி, மார்ச் 28 அன்று எங்க ஏரியா ஏரியா உள்ள வராத, ஏப்ரல் 04 அன்று வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் ஏப்ரல் 11 அன்று 6 வது வருடாந்திர விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ் ஒளிபரப்பாகும்.

பரிவட்டம் – 14 மார்ச் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்:

பிரபல தொடர் குடும்பங்கள் இந்த பரிவட்டம் கட்டப்படுவதற்கு முன்னின்று போட்டியிடும். பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்யலட்சுமி, பாரதி கண்ணம்மா நட்சத்திரங்கள் இதில் பங்குபெறுவர்.

எங்க வீட்டு மஹாலக்ஷ்மி 21 மார்ச் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்:

இளம் கதாபாத்திரங்கள் தங்கள் கதாபாத்திரங்களாகவேய ஒரு பார்ட்டியில் கலந்துகொள்கின்றனர்.

எங்க ஏரியா உள்ள வராத 28 மார்ச், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்:

விஜய் விருதுகளை அதிகம் வெல்லப்போவது யார் என்பதை இவர்கள் ஒருவருக்கொருவர் போட்டியிட்டு தங்களுக்கான வாதங்களை எடுத்துவைக்கின்றனர்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் 04 ஏப்ரல், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்:

விஜய் நட்சத்திரங்கள் ஆடல் பாடல் என்று தங்கள் திறமைகளை வெளிகொண்டுவருகின்றனர். சவால்களும் போட்டிகளும் இதில் ஏராளம் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ் நிகழ்ச்சி – 11 ஏப்ரல், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்:

30 விருதுகள், வண்ணமயமான நடனங்கள், நகைச்சுவை பொழுதுபோக்கு மற்றும் உணர்ச்சிகரமான தருணங்களுடன் 6 மணிநேர விருது வழங்கும் விழா நடைபெறும் நாள்.

பாரம்பரிய விழா பின்னணியில் ஒருபோதும் காணப்படாத வகையில் இந்த நிகழ்வு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விருது விழா நிகழ்ச்சியினை தொகுத்து வழங்குபவர்கள் திவ்யதர்ஷினி மற்றும் மா கா பா ஆனந்த் .

விருதுகள் பின்வருமாறு:

சிறந்த ஹீரோ, சிறந்த கதாநாயகி, சிறந்த தாய், சிறந்த தந்தை, சிறந்த மாமியார், சிறந்த மருமகள் , சிறந்த மகன், சிறந்த மகள், சிறந்த சீரியல், பிடித்த குடும்பம், சிறந்த துணை நடிகர் ஆண், சிறந்த துணை நடிகர் பெண், சிறந்த நகைச்சுவை மெகா தொடர், சிறந்த வில்லன், திரையில் பிடித்த ஜோடி, வளரும் இளம் ஜோடி, சிறப்பு விருது குழந்தை, ஆண்டின் கண்டுபிடிப்பு, சிறந்த இயக்குனர், சிறந்த புகைப்பட இயக்குனர், சிறந்த எழுத்தாளர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த தொகுப்பாளர் ஜோடி, சிறந்த தொகுப்பாளர் ஆண் / பெண் சிறந்த பாடகர், சிறந்த நகைச்சுவை நடிகர், பிடித்த விளையாட்டு நிகழ்ச்சி , சிறந்த நகைச்சுவை நிகழ்ச்சி, பிடித்த நிகழ்ச்சி மற்றும் பல.

நேயர்கள் வியக்கும் அளவிற்கு ஏராளமான நிகழ்ச்சிகள் காத்திருக்கிறது. வரும் ஞாயிறும் முதல் ஸ்டார் விஜய் யில் ஒளிபரப்பாகும் விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ் நிகழ்ச்சிகளின் தொகுப்பையும் ஏப்ரல் 11 அன்று விருதுகள் நிகழ்ச்சியையும் காணாதவறாதீர்கள்.