சூர்யா, அஜய் தேவ்கன், நாக சைதன்யா, வெளியிட்ட டிரெய்லர்

0

கேன்ஸ் திரைப்பட விழாவின் Marche du Film பிரிவில் வெற்றிகரமாக திரையிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்றுள்ள ‘பாலன் தி பாய்’ திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. படத்தின் அறிவிப்பு மற்றும் முதல் போஸ்டர் வெளியான தருணத்திலிருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படத்தின் டிரெய்லர், இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களால் பல மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தி பதிப்பை நடிகர் அஜய் தேவ்கன், தமிழ் பதிப்பை நடிகர் சூர்யா சிவகுமார், தெலுங்கு பதிப்பை நடிகர் நாக சைதன்யா மற்றும் கன்னட பதிப்பை நடிகர் ராஜ் பி. ஷெட்டி ஆகியோர் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்து, படக்குழுவிற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

அடையாளம், பொறுப்புணர்வு மற்றும் உயிர்பிழைப்பு போன்ற ஆழமான மனித உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லர், உணர்ச்சி, சஸ்பென்ஸ் மற்றும் பரபரப்பான காட்சிகளால் கவனத்தை ஈர்க்கிறது. சிந்திக்க வைக்கும் கதைக்களத்துடன் சக்திவாய்ந்த சினிமா அனுபவத்தை வழங்கும் படைப்பாக இது உருவாகியுள்ளதாக டிரெய்லர் உணர்த்துகிறது.

இப்படத்தை சிதம்பரம் இயக்கியுள்ள நிலையில், ஜீத்து மாதவன் கதையை எழுதியுள்ளார். தனித்துவமான கதைசொல்லலுக்குப் பெயர் பெற்ற இரு படைப்பாளர்களின் இந்த கூட்டணி, ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

கே.வி.என். புரொடக்ஷன்ஸ் மற்றும் தெஸ்பியன் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள ‘பாலன் தி பாய்’ திரைப்படம், வரும் ஜூன் 19, 2026 அன்று மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.