நாளை ஆளுநரை சந்திக்கிறார் தம்பிதுரை : தமிழக அரசியலில் பரபரப்பு

36

தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் மும்பையில் இருந்த இன்று சென்னை திரும்பினார். சென்னை திருப்பிய ஆளுநரை மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்தார். இந்த சந்திப்பின் போது நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக எம்.எல்.ஏகளுக்கு பணம் கொடுக்கப்பட்ட விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்.

மேலும் ஏற்கெனவே கடந்த பிப்ரவரி மாதம் நடைப்பெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்துவிட்டு மீண்டும் புதிதாக நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று ஸ்டாலின் ஆளுநரிடம் கோரிக்கை அளித்தார்.

இதனிடையே நாடாளுமன்ற மக்களவை துணை சபாநாயகரும் , நாடாளுமன்ற உறுப்பினருமான தம்பிதுரை நாளை காலை 11 மணியளவில் ஆளுநரை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இந்த சந்திப்பின் போது தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசப்படும் என ஏதிர்பார்க்கப்படுகிறது.இதனால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.