திடீரென அரசியல் தலைவர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த்!

37

கோலிவுட்டில் என்றும் சூப்பர் ஸ்டராக இருந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு இரு மகள்கள் சௌந்தர்யா மற்றும் ஐஸ்வர்யா.இரண்டாவது மகள் சௌந்தர்யா ‘கோச்சடையான், ‘விஐபி-2’ போன்ற படங்களை இயக்கியுள்ளார்.

இந்நிலையில் கடந்த 2010ல் இவருக்கும் தொழிலதிபர் அஸ்வின் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. பிறகு இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த வருடம் அஸ்வினை, சௌந்தர்யா விவாகரத்து செய்தார். இவர்களுக்கு வேத் என்ற மகன் உள்ளான்.

தற்போது சௌந்தர்யா திமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ பொன்முடியின் தம்பி தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் விசாகனை இரண்டாவது திருமணம் செய்யவுள்ளார். இவர்களது திருமணம் வரும் பிப்ரவரி 11-ஆம் தேதி சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டில் எளிமையாக நடைபெறவுள்ளது.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த், தனது மகள் சௌந்தர்யாவின் திருமணத்திற்கு நேரில் சென்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசருக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த சந்திப்பின் போது விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் திருமாவளவனும் உடனிருந்துள்ளார்.

அரை மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பில் மூவரும் தமிழக அரசியல் நிலவரம் பற்றி பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.