அண்ணா முதல் ஆ.ராசா வரை – ஆபாச தி.மு.க.

997

பெண் – லியோனி முகவரி… செருப்பு பார்சல் அனுப்பணும். செருப்பால அடிக்கத்தோணுது. பல பெண்களின் எண்ணம் இதுவாகத்தான் இருக்கும்.
காரணம்.. அவரது பேச்சு. பட்டிமன்ற பேச்சிலும் பெண் இழிவு.

திமுக கொள்கைப் பரப்புச் செயலாளரான பிறகும் தேர்தல் பரப்புரையின்போதும், ஆபாசப்பேச்சு தொடர்கிறது. தொண்டாமுத்தூர் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதியை ஆதரித்து திண்டுக்கல் லியோனி பிரசாரம் மேற்கொண்டார்.

பண்ணையில இருக்கற மாடுகளைப் பார்த்திருக்கிறீங்களா, ஃபாரின் மாடு, அத மெஷின்ல வச்சுத்தான் பால் கறப்பாங்க. அந்தப் பாலக் குடிச்சு குடிச்சுத்தான் நம்ம பெண்கள் பலூன் மாதிரி ஊதிப்போய் விட்டார்கள்.

ஒரு காலத்துல பெண்கள் இடுப்பு 8 மாதிரி இருக்கும். பிள்ளைய தூக்கி இடுப்புல வச்சா உட்கார்ந்து கொள்ளும். பாரின் மாடு பால் குடிச்சோம்னா பெரிசா ஊதிப்போக வேண்டியதுதான்.

8 மாதிரி இருந்த பெண்கள் இடுப்பு இன்று பேரல் மாதிரி பெருத்துப் போய் கிடக்கிறது.

பிள்ளைய தூக்கி இடுப்புல வச்சா வழுக்கி ஓடிடுது.

திண்டுக்கல் லியோனியின் பேச்சை தி.மு.க தலைவர் ஸ்டாலினோ மற்ற தலைவர்களோ யாருமே கண்டிக்கவில்லை, கண்டுகொள்ளவும் இல்லை.

இது எதிர்பார்த்ததுதான்… பெண்களை இழிவுபடுத்துவதோ… அவர்களை தரக்குறைவாகப்பேசுவதோ ஆபாசமாகப்பேசுவதோ திமுகவினரோக்கோ… திமுக தலைமைக்கோ பெரிய விஷயமில்லை.

அந்தக்கட்சியின் வரலாறு அப்படி. திமுக… தியாகத்தினால், கொள்கையினால் வளர்ந்த இயக்கம் மட்டும் அல்ல, பாலியல் வக்கிர பேச்சினாலும் வளர்ந்த கட்சிதான். திமுக – கொள்கைவீரர்கள் நிறைந்த இயக்கம் மட்டுமல்ல கோவலன்கள் நிறைந்த இயக்கமும்தான்.

பெண்கள் குறித்து அருவருக்கத்தக்கமுறையில் பேசுவது என்பது அண்ணா காலம் தொட்டே திமுகவில் இருந்துவரும் ஒன்றுதான்.

நடிகை பானுமதிக்கும் அண்ணாவுக்கும் தொடர்பு என்று கதை பரப்ப ஆரம்பித்த காங்கிரஸ் சட்டசபையில் இதுகுறித்து கேள்வி எழுப்ப…

‘நான் ஒன்றும் முற்றும் துறந்த முனிவனும் இல்லை. அவள் ஒன்றும் படி தாண்டா பத்தினியும் இல்லை’ என்று பதில் கொடுத்தார் அண்ணா.

ஒரு நடிகைக்கும் தனக்கும் இருந்த தகாத உறவுக்கே புதிய இலக்கணம் கொடுத்தவர்தான் அண்ணாத்துரை…

தன்னை முற்றும் துறந்த முனிவன் இல்லை என்று வெளிப்படையாகச் சொல்லும் உரிமை அண்ணாவுக்கு உண்டு. ஆனால் பானுமதியை படிதாண்டா பத்தினி இல்லை என்று சொல்லும் உரிமை அண்ணாவுக்கு கொடுத்தது யார்? அவரது பேச்சு பெண்ணை இழிவுபடுத்தும் பேச்சு.

அவருக்குப் பிறகு திமுகவின் தலைவரான கருணாநிதியும் இப்படி ஆபாசமாகப் பேசுவதில் சளைத்தவரில்லை.

மதுரையில் இந்திராகாந்தி மீது திமுகவினர் கல்வீச்சு நடத்தியதில் இந்திரா காந்தி அம்மையாருக்கு தலையில் ரத்தம் கொட்டியது. மதுரையில் பொதுகூட்டத்தில் திருமதி இந்திரா காந்தியை கல்லால் அடித்து நெற்றியில் வந்த ரத்தத்தை பற்றி கருணாநிதி என்ன சொன்னார் தெரியுமா? அது ‘மாதவிடாய் ரத்தமாக இருக்கும்’ என்று அநாகரிகமாகப் பேசினார்.

இந்திராகாந்தி விஷயத்தில் மட்டுமல்ல ஜெயலலிதா பற்றியும் இப்படி ஆபாசமாகப்பேசிய சம்பவமும் உண்டு.

1989 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் தேதி சட்டசபையில் ஜெயலலிதா தாக்கப்பட்டார். சேலையை இழுத்து மானபங்கப்படுத்தப்பட்டார். சட்ட சபையில் இருந்து வெளியேறிய ஜெயலலிதா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். ”துரைமுருகன் எனது சேலையை பிடித்து இழுத்து கிழித்தார். முதலமைச்சர் கருணாநிதி மிகவும் ஆபாசமாக ஒரு வார்த்தையைச் சொல்லி என்னைத் திட்டினார். என்று சொன்னார்.

ஜெயலலிதா உடம்பில் பற்குறிகளும்… நகக்குறிகளும்… இருப்பதாக கருணாநிதி சொன்னதாக அப்போது செய்திகள் வெளியாகின.

கருணாநிதியின் பேரனான உதயநிதி மற்ற விஷயங்களில் எப்படியோ, இப்படி ஆபாசமாகப்பேசுவதில் தாத்தாவின் பெயரைக்காப்பாற்றி இருக்கிறார். திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் எடப்பாடி பற்றி பேசும்போது, அவர் எடப்பாடி இல்ல. டெட்பாடி. முதல்வர் பதவிக்காக, சசிகலா கால்ல அப்படி தானே விழுந்து கெடந்தாரு. டேபிள், சேர்கள் எல்லாம் புகுந்து வந்தாரு. விட்டா அந்த அம்மா காலுக்குள்ளயே புகுந்துருப்பாரு என்று நக்கல் நையாண்டி செய்தார்.
அவரது பேச்சு மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியதும்…

“நான் பெண்களை தவறாக பேசவில்லை; நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது; யார் மூலமாவது புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

பெரும் சர்சைக்குள்ளான உதயநிதியின் கருத்து அவர் மன்னிப்பு கேட்டிருப்பதால் முடிவு வந்தது.

இதற்கிடையில் ஆ.ராசாவும் எடப்பாடியைப் பற்றி பேசுகிறபோது, அவர் முறைதவறி பிறந்த குழந்தை என்று ஆபாசப்பேச்சு பேசி இருக்கிறார்.

திமுகவினரின் இதுபோன்ற ஆபாசப்பேச்சுகள் திமுக தொண்டர்களை கொஞ்சமும் பாதிக்கவில்லை. பாதிக்கவும் செய்யாது.

காரணம்… அவர்கள் எல்லாம்,

வெற்றிகொண்டான், தீப்பொறி ஆறுமுகம், நன்னிலம் நடராஜன், காரை ஆடலரசு, வண்ணை ஸ்டெல்லா, சிதம்பரம் ஜெயவேலு – போன்ற ஆபாசப்பேச்சாளர்களின் பேச்சு கேட்டு அனுபவம் உள்ளவர்கள். இவர்களுடைய பொதுக்கூட்டங்களில் நிற்க இடமிருக்காது. கூட்டம் வழியும். காரணம் அவர்கள் பேசும் கொள்கை பற்றி கேட்பதற்கு அல்ல, ஆபாசப் பேச்சுக்காகத்தான். பல திமுக மாநாடுகளில் வெற்றிகொண்டான், தீப்பொறி ஆறுமுகம் போன்ற இந்த ஆபாசப்பேச்சாளர்களின் பேச்சை கருணாநிதி ரசித்துக்கேட்டு கைதட்டிய காலங்களும் உண்டு.

எனவே, உதயநிதியின் பேச்சோ, லியோனியின் பேச்சோ உடன்பிறப்புகளுக்கு தப்பாகத் தெரியாது. அதிர்ச்சியைக் கொடுக்காது.

நம் கேள்வி… திமுகவில் உள்ள பெண்கள் எல்லாம் எங்கே போனார்கள்? பெண்களை இழிவுபடுத்தும் நபரை ஒருவார்த்தை கண்டிக்கும் துணிவுகூட இல்லை என்றால் நீங்கள் எல்லாம் பொதுவாழ்க்கையில் இருந்து என்னத்த கிழிக்கப்போறீங்க?

திமுக பெண்களுக்கு மரியாதை மற்றும் உரிமையை கொடுக்கும் கட்சி என கூறி வரும் கனிமொழி கூட உதயநிதியை கண்டிக்கவில்லை ஆனால் லியோனியின் ஆபாசப்பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்ததும்,

அரசியல் தலைவர்கள் யாராக இருந்தாலும் பெண்களை இழிவு படுத்தி தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வது கண்டிக்கத்தக்கது. இதை எல்லோருமே மனதிலே வைத்துக்கொண்டால் இந்த சமூகத்திற்கு நல்லது. இதுதான் திராவிட இயக்கமும் பெரியாரும் விரும்பிய சமூகநீதி ஆகும்.

என்று ட்வீட் செய்தார்.

கனிமொழி பரவாயில்லை. மற்ற பெண் பிரமுகர்களான தமிழச்சி தங்கபாண்டியன் போன்றவர்கள் வாயைதிறக்கவில்லை.

இதற்கிடையில், மாணவிகளுக்கு இலவச நாப்கின் தருகிறோம் என்ற திமுக தேர்தல் அறிக்கையை விமர்சித்து.

“ஒரு அத்தியாவசிய பொருள் நாப்கின கூட, தன் வீட்டு பெண்களுக்கு வாங்க, வாங்கி தர முடியாத வக்கற்ற நிலையில் தான் மக்களை வைத்து இருக்கிறது என்று பேராவூரணி நாதக வேட்பாளர் திலீபன் பேசினார்.

கவிஞர் சல்மா லியோனியின் ஆபாசப்பேச்சை கண்டுகொள்ளவில்லை. கண்டிக்கவும் இல்லை. ஆனால் திலீப்ன பேசியதை பெண்களுக்கு எதிரான பேச்சாக திசைதிருப்புவதுபோல், ஒரு ட்வீட் போட்டார்.

பெண்களது உடல் சார்ந்த இயற்கையான மாதவிடாய் பிரச்னையை கவனத்தில் கொள்ள தெரியாத இந்த முட்டாள்கள்தான் சட்டமன்ற தேர்தலில் சரிபாதி பெண் வேட்பாளர்களை நிறுத்தியதா? அதை கொண்டாடிய நடுநிலையாளர்கள் எங்கே போனார்கள்?