மாயத்திரை பட பாடலை வெளியிட்ட நடிகை ரோஜா

48

பிடிச்சிருக்கு , முருகா , கோழி கூவுது போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்த அசோக் குமார் மாயத்திரையின் கதாநாயகனாக நடிக்கிறார் .

டூலெட், திரௌபதி படங்களின் கதாநாயகி ஷீலா ராஜ்குமார் கதாநாயகியாக நடிக்கிறார்.

இன்னொரு கதாநாயகியாக சாந்தினி தமிழரசன் நடிக்கிறார்.

கோலி சோடா, சண்டிவீரன் படங்களுக்கு இசையமைத்த எஸ்.என். அருணகிரி இசைமைக்கிறார் .ப.சாய் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் தி.சம்பத் குமார் இப்படத்தை இயக்குகிறார் .

இந்த படத்தின் ‘ராசத்தியே ” என தொடங்கும் இரண்டாவது பாடலை நடிகை ரோஜா அண்மையில் வெளியிட்டு படக்குழுவினரை பாராட்டினார் .

இப்பாடலுக்கு எஸ். தமன் இசையமைத்துள்ளார் .

மாயத்திரை -இது ஒரு பேய் படம் .

ஆனால் வழக்கமான பேய் படங்களிலிருந்து இது மாறுபட்டதாக இருக்கும் .இந்தப் படத்தில் அதிகமா பயமுறுத்தும் காட்சிகள் இருக்காது.

அதனால் ஆறிலிருந்து அறுபது வரை உள்ள அனைவரும் குடும்பத்தோடு வந்து படம் பார்க்கலாம் . இது ஒரு ஜனரஞ்சகமான பொழுதுபோக்கு படம்.