OFFICIAL-Vaigai-Puyal-Vadivelu-comeback-film-titled-NAAI-SEKAR-RETURNS-Suraaj-Lyca-Productions

வெளியானது நடிகர் வடிவேலுவின் பர்ஸ்ட் லுக்

49

திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில், இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு நடிக்க உள்ள இப்படத்துக்கு
“நாய் சேகர் ரிட்டன்ஸ்” என்று படத்தின் தலைப்பினை அறிவித்தது லைக்கா நிறுவனம்.

திரைப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் ஆகியவற்றை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம்
தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

நகைச்சுவை நடிகர் வடிவேலு கதாநாயகனாக நடிக்கும் இத்திரைப்படத்துக்கு  இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

மேலும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளனர்.

டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் ரசிகர்களிடமும்  பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.