2022 ஆம் ஆண்டு இப்போதுதான் துவங்கியது, திரைப்பட விருதுகளின் சீசனும் துவங்கிவிட்டது.
திரைத்துறையின் மிக உயரிய ஆஸ்கர் விருது குழு, இந்த ஆண்டிற்கான மதிப்புமிக்க விருது கௌரவத்திற்குத் தகுதியான இருநூற்று எழுபத்தாறு திரைப்படங்களின் பெயர்களை இன்று அறிவித்தது.
தகுதியான 276 படங்களில், இந்த மதிப்புமிக்க விருதுக்கு போட்டியிட நடிகர் சூர்யா நடித்த “ஜெய்பீம்” திரைப்படமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு தகுதி பட்டியலில் இடம் பிடித்த ஒரே தமிழ் திரைப்படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த ஆண்டு சூர்யாவின் “சூரரைப் போற்று” 93வது அகாடமி விருதுகளுக்கான தகுதிப் பட்டியலில் இடம்பிடித்தது குறிப்பிடத்தக்கது.
ஜெய்பீம் திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியான நொடியிலிருந்தே, பழங்குடியினர், அதிகார வர்க்கத்தினரால் ஒடுக்கப்பட்டதை அருமையாக கையாண்டததற்காக அனைவராலும் பாராட்டப்பட்டது. சமீபத்தில் ஆஸ்கர் அகாடமி குழுவின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் இத்திரைப்படத்தின் பின்னணி வீடியோ வெளியிடப்பட்டது.
இந்நிகழ்வு இது சர்வதேச திரைப்பட அரங்கில் பெரும் கவன ஈர்ப்பை ஏற்படுத்தியது. ஆங்கிலம் அல்லாத அயல்மொழித் திரைப்படப் பிரிவில் மதிப்புமிக்க கோல்டன் குளோப்ஸ் 2022க்கான அதிகாரப்பூர்வ நுழைவையும் இந்தத் திரைப்படம் பெற்றுது குறிப்பிடத்தக்கது.
ஜெய்பீம் திரைப்படம் 90 களில் தமிழ்நாட்டில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை வைத்து உருவாக்கப்பட்ட தமிழ் மொழித் திரைப்படமாகும். இது இருளர் பழங்குடியினத்தைச் சேர்ந்த ராஜகண்ணு மற்றும் செங்கேனி ஆகியோரின் கதையை விவரிக்கிறது. ராஜகண்ணு உள்ளூர் காவல்துறையினரால் செய்யாத குற்றத்திற்கு காவல் நிலையத்தில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படும் சம்பவத்தால், அவர்களின் வாழ்க்கையை தலைகீழாக மாறுகிறது.
இயக்குநர் டி.ஜெ.ஞானவேல் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ஜோதிகா மற்றும் சூர்யா தயாரித்துள்ளனர்.
இப்படத்தில் சூர்யா மற்றும் லிஜோமோல் ஜோஸ், மணிகண்டன், ரஜிஷா விஜயன், பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ் இவர்களுடன் மற்றும் பலர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.
ஆஸ்கார் விருதுக்கான பரிந்துரை வாக்களிப்பு ஜனவரி 27, 2022 வியாழன் அன்று தொடங்குகிறது, பரிந்துரைகள் முடிவு பிப்ரவரி 8, 2022 செவ்வாய் அன்று அறிவிக்கப்படும்.
விருது வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 27, 2022 அன்று ஹாலிவுட் & ஹைலேண்டில் உள்ள டால்பி®️ தியேட்டர் ஹாலிவுட் மற்றும் ஏபிசி மற்றும் உலகெங்கிலும் 200 க்கும் மேற்பட்ட பிராந்தியங்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட திட்டமிடப்பட்டுள்ளது.