விஜய் – எச்.வினோத்  புதுமையான கூட்டணியில் படம்

6

கே. வி. என் புரொடக்ஷன்ஸ் தமது அடுத்த படைப்பான விஜய்யுடன் இணையும் தளபதி- 69 தமிழில் தங்களது முதலாவது தயாரிப்பாக அமைவதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறது.
இந்த படம் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான புகழ்பெற்ற விஜய்-க்கும், புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனம், புகழ்பெற்ற இயக்குனர் எச். வினோத் மற்றும் தரவரிசையில் இடம் பிடிக்கும் பாடல்களைத் தந்த ‘அனிருத் ரவிச்சந்தர்’ ஆகியோர் இடையிலான குறிப்பிடத்தக்க புதுமையான கூட்டணியாக அமைகிறது.
தனது அற்புதமான நடிப்புக்கும், பெரும் ரசிகர் பட்டாளத்துக்கும் பெயர் பெற்ற ‘தளபதி’விஜய், ‘தளபதி-69’-இல் இதற்கு முன்பு பார்த்திராத தோற்றத்தில் தோன்ற உள்ளார். தரமான திரைப்படங்களைத் தயாரிப்பதோடு மட்டுமல்லாமல் நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களை விநியோகப்பதற்கும் பெயர் பெற்ற வெங்கட் கே நாராயணா அவர்கள் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான கே வி என் புரொடக்ஷன்ஸ் சார்பில், ‘தளபதி-69’-ஐ தயாரிப்பதன் மூலம் தலைசிறந்த படைப்பை வழங்க உறுதிபூண்டுள்ளனர். இத்திரைப்படத்தை ஜெகதீஷ் பழனிசாமி மற்றும்
லோகித் என்.கே இணைந்து தயாரிக்கிறார்கள்.
குறிப்பிடத்தக்க தனது முந்தைய படைப்புகளின் மூலம் பாராட்டப்பட்ட திறமையான இயக்குனரான எச். வினோத் அவர்கள் இந்த பிரம்மாண்ட முயற்சிக்கு உயிரளிக்கிறார். விஜய் மற்றும் எச்.வினோத் முதன்முறையாக  கூட்டணி சேர்வதன் மூலம் ஒரு புதுமையான மற்றும் அற்புதமான சினிமா அனுபவத்தை அளிக்கும் திரைப்படமாக அமையும் என்பது உறுதியாகிறது.
இதற்கு முன்பு விஜய் நடித்த திரைப்படங்களான கத்தி, மாஸ்டர், பீஸ்ட் மற்றும் லியோ போன்ற  படங்களுக்கு இசையமைத்து, வெற்றிப் பாடல்களைத் தந்த ‘அனிருத் ரவிச்சந்தர்’ இத்திரைப்படத்திற்கு இசையமைப்பதன் மூலம்
‘தளபதி’ விஜய் அவர்களுடன் ஐந்தாவது முறையாக கூட்டணி அமைக்கிறார்.
இத்திரைப்படத்தின் மூலம் மாபெரும் வெற்றியை எதிர் நோக்குகிறோம்.  இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்த அக்டோபரில் துவங்கி, அடுத்த ஆண்டு அக்டோபர்-2025-இல் வெளியாக உள்ளது.
மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர்கள் பற்றிய அறிவிப்பு கூடிய விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். கே வி என் புரோடக்ஷன்ஸ் நிறுவனம் ‘தளபதி’ விஜய் அவரது ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்ட மலரும் நினைவுகளையும் இப்படப்பிடிப்பின் போது உருவாகும் புதிய  நினைவுகளையும் பகிர்ந்து கொள்ள பிரத்யேக வியூகத்தை வகுத்துள்ளது.
இந்த பிரம்மாண்டமான பயணத்தில் தங்களது வாழ்த்துக்களையும், ஆசீர்வாதங்களையும் ஆதரவையும் எதிர்நோக்குகிறோம். இதை கொண்டாடுவதோடு மட்டுமல்லாமல் அன்பு மற்றும் மகிழ்ச்சியை பகிருங்கள். நிறைய அறிவிப்புகள் வரவுள்ளன காத்திருங்கள்,