இயக்குனர் பொன்ராம் வெளியிட்ட ஜெட்டி படத்தின் முதல் பார்வை

47

நவீனமான இந்த நூற்றாண்டிலும் , கலாச்சாரம் , கட்டுப்பாடுடன் வாழும் கடலோர மீனவ கிராமங்கள் எத்தனையோ உள்ளன .

அப்படிப்பட்ட ஒரு கடலோர கிராமத்தில் மக்கள் மனதை உலுக்கிய ஓர் உண்மைச்சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் ஜெட்டி

கடல்சார்ந்த மீனவ கிராமங்களின் வாழ்வியலை யதார்த்தமாக படம் பிடித்துக்காட்டி , அவர்களுடைய பிரச்சினைகளை சொல்வதோடு மட்டும் அல்லாமல் , அதற்குண்டான நிரந்தர தீர்வுகளையும் சொல்லும் உயர்ந்த நோக்கத்தோடு எடுக்கப்பட்ட படம் ஜெட்டி.

இதில் நந்திதா சுவேதா , புதுமுகம் மான்யம் கிருஷ்ணா , கிஷோர் , மைம் கோபி , சுமன்ஷெட்டி ஆகியோர் நடித்துள்ளனர் .

” ஜில் ஜில் ஜில் ” என்ற இளமை துள்ளலான பாடலுக்கு சிறப்பாக ஆடி இருக்கிறார் தேஜாஸ்வினி தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் அதிகமான பொருட்செலவில் தயாரித்து இருக்கிறார் தயாரிப்பாளர் கே . வேணு மாதவ்.

ஒரே ஒருமுறை தயாரிப்பாளரிடம் கதை சொல்லி கொரோனா காலத்திலே படம் எடுக்க வைத்து , திரைக்கதை எழுதி , யதார்த்தமாக இயக்கி இருக்கிறார் அறிமுக இயக்குனர் பி . சுப்பிரமணியம் பிரபல ஒளிப்பதிவாளர் ரத்னவேலுவின் இணை ஒளிப்பதிவாளர் வீரமணி ஒளிப்பதிவு செய்துள்ளார் .

இயக்குனர் பி.வாசுவின் உதவியாளர் தி.ரமேஷ் பிரபாகரன் வசனம் எழுதி இருக்கிறார்.

கார்த்திக் கொடக்கன்ட்லாவின் இசையில் அத்தனை பாடல்களையும் கவிஞர் டாக்டர் கிருதியா எழுதியுள்ளார்.

விஜய் பிரகாஷ் ,விஜய்யேசுதாஸ் பாலக்காடு ஸ்ரீராம் , ஸ்ரீகாந்த் ஹரிஹரன் , வைக்கோம் விஜயலக்ஷ்மி பத்மஜா , ஸ்ரீனிவாசன் ஆகியோர் பாடல்களை பாடியுள்ளனர் .

சமீபத்தில் இயக்குனர் பொன்ராம் தன்னுடைய அடுத்த படமான எம்ஜிஆர் மகன் வெளியீடு வேலைகளில் இருந்த போதிலும் இப்படத்தின் முதல் பார்வையை வெளியிட்டு படக்குழுவினரை வெகுவாக பாராட்டியுள்ளார்.