இந்த படத்தில் “கௌர்நாயுடு” என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள சிவராஜ்குமார், இப்படத்தின் கதை தான் தன்னை மிகவும் கவர்ந்ததாக தெரிவித்துள்ளார். குறிப்பாக தனது கதாபாத்திரத்திற்கு தெளிவான நோக்கம் மற்றும் வலுவான உணர்வுப்பூர்வமான பின்னணி இருப்பதால், இப்படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைந்ததாக கூறியுள்ளார். மேலும், பெத்தி மற்றும் கௌர்நாயுடு இடையிலான பாசமும் உணர்ச்சி பந்தமும் ரசிகர்களை நிச்சயம் கவரும் என்றும் தெரிவித்துள்ளார்.
அதேபோல், ராம் சரண் நடித்த விதம் குறித்து அவர் மிகவும் பெருமையாக பேசியுள்ளார். இந்த படத்திற்காக ராம் சரண் தேசிய விருது வெல்வார் என்ற நம்பிக்கை தனக்குள்ளதாகவும், அவரது உடல் மாற்றம் மற்றும் அர்ப்பணிப்பு அளவிட முடியாதது என்றும் கூறியுள்ளார். இரண்டு ஆண்டுகளாக முழுமையான ஈடுபாட்டுடன் அந்த கதாபாத்திரத்தில் வாழ்ந்துள்ளார் என்றும், மிக நேர்மையாக நடித்துள்ளார் என்றும் அவர் பாராட்டியுள்ளார்.
இயக்குநர் புச்சி பாபு சனா பற்றி…,
பல விளையாட்டுகளை மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில், ஒவ்வொரு விளையாட்டும் கதையுடன் நெருக்கமாக இணைந்திருப்பதாகவும், குறிப்பாக கிளைமாக்ஸ் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். “பெத்தியின் பயணம் மிகவும் விசேஷமானது; அதை திரையரங்கில் அனுபவிக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தயாரிப்பாளர் சதீஷ் குறித்து …
பெத்தி படம் குறித்து அவர் பகிர்ந்துள்ள தகவல்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை வெகுவாக அதிகரித்துள்ளது.