ஜிவி பிரகாஷுக்கு RX100 பைக் பரிசளித்த தயாரிப்பாளர்

AK Film Factory சார்பில் அருண்குமார் தனசேகரன் தயாரிப்பில், ஜிவி பிரகாஷ் மற்றும் கயாது லோஹர் நடிப்பில், அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் வெளியான ஃபேண்டஸி திரில்லர் திரைப்படமான ‘இம்மார்டல்’, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் நடைபெற்ற வெற்றி விழாவில், நடிகர் ஜிவி பிரகாஷ் மற்றும் விநியோகஸ்தர் சக்திவேலன் உள்ளிட்டோருக்கு தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரன் உயர்தர கைக்கடிகாரங்களை வழங்கினார். மேலும், நடிகர் ஜிவி பிரகாஷுக்கு RX100 மோட்டார் சைக்கிளையும் பரிசளித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

விழாவில் தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரன், இயக்குநர் மாரியப்பன் சின்னா, இசையமைப்பாளர் சாம் சி.எஸ்., விநியோகஸ்தர் சக்திவேலன், நடிகர் ஜிவி பிரகாஷ் உள்ளிட்டோர் பேசுகையில், படத்திற்கு ஆதரவு அளித்த ரசிகர்கள், திரையரங்க உரிமையாளர்கள், ஊடகங்கள் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் நன்றி தெரிவித்தனர்.

படத்தின் வெற்றியில் CG மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு முக்கியமானது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
வித்தியாசமான கதைக்களம் மற்றும் ஃபேண்டசி திரில்லர் அம்சங்களால் ரசிகர்களைக் கவர்ந்துள்ள ‘இம்மார்டல்’ திரைப்படம், தமிழகமெங்கும் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

The producer gifted GV Prakash an RX100 bike
Comments (0)
Add Comment