என்.டி.ஆர் – இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் மீண்டும் இணையும் படம்

இந்திய சினிமா ரசிகர்கள் பல ஆண்டுகளாக ஆவலுடன் எதிர்பார்த்திருந்த கூட்டணி மீண்டும் இணைகிறது. என்.டி.ஆர் மற்றும் முன்னணி இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இணையும் புதிய திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘அரவிந்த சமேத வீரராகவா’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைவது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பை நடிகர் என்.டி.ஆர், தனது X சமூக வலைதளப் பக்கத்தின் மூலம் வெளியிட்டுள்ளார். அறிவிப்பு போஸ்டரில் திரிசூலமும் வேலும் ஒன்றிணையும் வடிவமைப்புடன், DNA வடிவமும் இடம்பெற்றுள்ளது. மேலும், “One Spear… One Purpose… One Divine Reckoning” (ஒரே வேல்… ஒரே நோக்கம்… ஒரே தெய்வீக தீர்ப்பு) என்ற சக்திவாய்ந்த டேக்லைன், படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

புராணக் கதைகளின் தாக்கத்துடன், தெய்வீக கருவை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த திரைப்படம், வலுவான கதைக்களம், ஆழமான உணர்வுகள்,  உலகக் கட்டமைப்பு மற்றும் அதிரடி காட்சிகளுடன் உருவாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இந்த திரைப்படத்திற்கு இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். அவரது இசை, இந்த பிரம்மாண்ட படைப்புக்கு மேலும் ஒரு தனித்துவமான அனுபவத்தை வழங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

ஹாரிகா & ஹாசினி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் எஸ். ராதாகிருஷ்ணா (சின்ன பாபு) மற்றும் என்.டி.ஆர் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் நந்தமூரி கல்யாண் ராம் இணைந்து இந்த திரைப்படத்தை தயாரிக்கின்றனர். தெலுங்கு சினிமாவின் வெற்றிகரமான நடிகர்–இயக்குநர் கூட்டணியுடன், இரண்டு முன்னணி தயாரிப்பு நிறுவனங்களும் கைகோர்ப்பதால், இந்திய சினிமாவின் படைப்புகளில் ஒன்றாக இந்த திரைப்படம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திரைப்படத்தின் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், படப்பிடிப்பு அட்டவணை மற்றும் பிற முக்கிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பின் மூலம், இந்திய சினிமாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாக இந்த புதிய என்.டி.ஆர் – திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் கூட்டணி ஏற்கனவே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

NTR and director Trivikram Srinivas reunite for a filmஅனிருத்என்.டி.ஆர்திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ்
Comments (0)
Add Comment