துருவ் விக்ரம் நடிக்கும் ‘#DV 4’ பட தொடக்க விழா

இந்தியா முழுவதும் தரமான மற்றும்  திரைப்படங்களை தயாரித்து வரும் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ், தெலுங்கு திரையுலகில் வெற்றிக்கொடி நாட்டியதுடன், தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் தனது தயாரிப்புகளை விரிவுபடுத்தி வருகிறது. அந்த வகையில், தனது நான்காவது தமிழ் திரைப்படமான #MythriTamil04 (#DV4)-ஐ பூஜையுடன் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் அலுவலகத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில், இயக்குநர்கள் சசி, சௌர்யுவ் (ஹாய் நானா), ஆதிக் ரவிச்சந்திரன், ஆண்டனி பாக்யராஜ் மற்றும் ராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். மேலும், முகூர்த்த காட்சிக்கான கிளாப்பை இயக்குநர் கீர்த்தீஸ்வரன் அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைத்தார்.

அறிமுக இயக்குநர் கரண் அரவிந்த் குமார் இயக்கும் இந்த திரைப்படத்தில் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கிறார். இது அவரது திரையுலகப் பயணத்தின் நான்காவது திரைப்படமாகும். அவருடன் பிருத்வி பாண்டியராஜன் மற்றும் சாய் தீனா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஷபி மற்றும் கரண் அரவிந்த் குமார் இணைந்து கதையை எழுதியுள்ள இந்த திரைப்படத்திற்கு விக்கி ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பை ஜெயசூர்யா மேற்கொள்கிறார். தேசிய விருது பெற்ற ஸ்டண்ட் இயக்குநர் விக்ரம் மோர் அதிரடி காட்சிகளை வடிவமைக்கிறார்.

முழுமையான கமர்ஷியல் மாஸ் என்டர்டெய்னராக உருவாகும் இந்த திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர்களான நவீன் யெர்னேனி மற்றும் ரவிசங்கர் யலமஞ்சிலி ஆகியோர் தயாரிக்கின்றனர்.

‘பைசன்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, துருவ் விக்ரம் இந்த படத்தில் இதுவரை இல்லாத மாஸ் தோற்றத்தில் ரசிகர்களை சந்திக்கவுள்ளார். வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பதில் பெயர் பெற்ற அவர், இந்த முறை அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையிலான வணிக அம்சங்கள் நிறைந்த பொழுதுபோக்கு திரைப்படத்தில் நடிக்கிறார்.

ஏற்கனவே அஜித் குமார் நடித்த ‘குட் பேட் அக்லி’ மற்றும் பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘டியூட்’ ஆகிய வெற்றிப் படங்களை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ், தற்போது துருவ் விக்ரமுடன் இணைந்திருப்பது இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.

Dhruv VikramDirected Karan A Kumar; MythriTamil04DV4சாய் தீனாதுருவ் விக்ரம்பிருத்வி பாண்டியராஜன்
Comments (0)
Add Comment