நடிகை சாக்ஷி அகர்வால் தனது பிறந்தநாளை முன்னிட்டு, கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் ஈடுபட்டு உருவாக்கிய பிரீமியம் பெர்ஃபார்மன்ஸ் நியூட்ரிஷன் பிராண்ட் ‘OKUU’-வை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளார்.
‘காலா’, ‘விஸ்வாசம்’, ‘அரண்மனை 3’ உள்ளிட்ட திரைப்படங்கள் மற்றும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடையே பிரபலமான சாக்ஷி அகர்வால், தற்போது தொழில்முனைவோராகவும் தனது புதிய இன்னிங்ஸை தொடங்கியுள்ளார்.
இந்த தயாரிப்பை உருவாக்குவதற்காக கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆராய்ச்சி, தயாரிப்பு மேம்பாடு மற்றும் தரக் கட்டுப்பாட்டு பணிகளில் தீவிரமாக செயல்பட்ட அவர், இறுதி 11 மாதங்களில் மட்டும் தயாரிப்பு கலவையில் 551 முறை மாற்றங்களை செய்து, தனது எதிர்பார்ப்புக்கு ஏற்ற தரத்தை உறுதி செய்துள்ளார்.
பொதுவாக பிரபலங்கள் ஏற்கனவே சந்தையில் உள்ள தயாரிப்புகளுக்கு விளம்பரத் தூதர்களாக செயல்படும் நிலையில், சாக்ஷி அகர்வால் தனது பெயரை பயன்படுத்துவதை விட, தரமான ஊட்டச்சத்து தயாரிப்பைத் தானே உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளார். தயாரிப்பின் தேவையை கண்டறிவது முதல், அதன் கலவை, தரம் மற்றும் நிறுவனத்தின் நோக்கம் வரை ஒவ்வொரு கட்டத்திலும் அவர் நேரடியாக பங்கேற்றுள்ளார்.
உடல்தகுதியை பராமரிப்பதிலும், திரைப்படப் பணிகளை சமநிலைப்படுத்துவதிலும் பெற்ற அனுபவங்களே, இந்திய மக்களுக்கு உலகத் தரத்திலான ஊட்டச்சத்து தயாரிப்புகளை வழங்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.
‘OKUU’ என்பது தாவர அடிப்படையிலான (Plant-Based) பிரீமியம் புரோட்டீன் பார் ஆகும். இதில் 35 கிராம் புரோட்டீன், 14 கிராம் நார்ச்சத்து மற்றும் 6 கிராம் கொலாஜன் இடம்பெற்றுள்ளதுடன், சர்க்கரை, தேவையற்ற ரசாயனங்கள் மற்றும் செயற்கை சேர்மங்கள் சேர்க்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சாக்ஷி அகர்வால் …,
“கடந்த ஐந்து ஆண்டுகளாக நடிகை வாழ்க்கையுடன் இணைந்து, ‘OKUU’ நிறுவனத்தை உருவாக்கும் பணியிலும் முழு அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வந்தேன். இது ஒரு பிரபலத்தின் பெயரில் உருவாக்கப்பட்ட பிராண்ட் அல்ல. இந்திய மக்களுக்கு தரமான மற்றும் சிறந்த ஊட்டச்சத்து தயாரிப்புகளை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் உருவானது. பல ஆண்டுகளாக நான் கண்ட கனவை இன்று அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்,” என்றார்.
‘OKUU’ நிறுவனத்தின் அறிமுகத்தின் மூலம், நடிகை சாக்ஷி அகர்வால் இந்தியாவின் பெர்ஃபார்மன்ஸ் நியூட்ரிஷன் துறையில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளதுடன், நடிகையாகவும் தொழில்முனைவோராகவும் தனது பயணத்தை மேலும் விரிவுபடுத்தியுள்ளார்.