தமிழ் இசையை உலக அரங்கிற்கு தொடர்ந்து எடுத்துச் செல்லும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் இசைப் பயணத்தில் மேலும் ஒரு பெருமையான மைல்கல் இணைந்துள்ளது.
சந்தோஷ் நாராயணன் இசையமைத்த ‘Enjoy Enjaami’ மற்றும் ‘Maamadura’ ஆகிய பாடல்கள், தற்போது வெளியாகியுள்ள சர்வதேச Netflix திரைப்படமான ‘Best of the Best’-ல் இடம்பெற்றுள்ளன.
உலகளாவிய ரசிகர்களை சென்றடையும் வகையில் வெளியாகியுள்ள இப்படத்தில் தமிழ் பாடல்கள் இடம்பெற்றிருப்பது, தமிழ் இசையின் தனித்துவத்தையும் அதன் சர்வதேச பயணத்தையும் மீண்டும் வெளிப்படுத்தும் முக்கியமான தருணமாக அமைந்துள்ளது.
குறிப்பாக, உலகளவில் கவனம் பெற்ற ‘Enjoy Enjaami’ பாடலுடன், ‘Maamadura’ பாடலும் சர்வதேச திரைப்படத்தில் இடம்பெற்றிருப்பது சந்தோஷ் நாராயணனின் இசையின் தனித்துவத்திற்கும், தமிழ் இசையின் எல்லையற்ற பயணத்திற்கும் மற்றுமொரு சிறப்பான அடையாளமாக அமைந்துள்ளது.