யுவன் சங்கர் ராஜாவை அவமானப் படுத்திய சூர்யா… – மாஸ் படத்திலிருந்து யுவன் விலகல்?

yuvan2

ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில், சூர்யா நடிக்கும் மாஸ் படத்தை வெங்கட்பிரபு இயக்கி வருகிறார்.

வெங்கட்பிரபு படத்தில் கதை இருக்கிறதோ இல்லையோ… இரண்டு விஷயங்கள் தவறாமல் இருக்கும்.

ஒன்று… பிரேம்ஜிக்கு ஒரு கேரக்டர்.

இரண்டு… அப்படத்துக்கு யுவன்சங்கர்ராஜா இசையமைப்பாளராக இருப்பார்.

பிரேம்ஜிக்கு கேரக்டர் கொடுப்பது என்பது… தயாரிப்பாளர்கள் செலவில் அண்ணன் வெங்கட்பிரபு தம்பிக்கு செய்யும் உதவி.

இசையமைப்பாளராக யுவன்சங்கர்ராஜாவை கமிட் பண்ணுவது இந்த ரகமில்லை.

காரணம்… வெங்கட்பிரபுவுக்கு விலாசம் கிடைக்க யுவன்சங்கர்ராஜாதான் காரணம்.

வெங்கட்பிரபுவின் படங்களுக்கும் அப்படங்களின் வெற்றிக்கும் யுவனின் இசை பெரிதும் உதவி செய்தன.

சூர்யாவை வைத்து தற்போது வெங்கட்பிரபு இயக்கும் மாஸ் படத்துக்கும் யுவன்சங்கர்ராஜாதான் இசையமைப்பாளர்.

இந்தப்படத்துக்காக சில பாடல்களுக்கு இசையமைத்துக் கொடுத்த யுவன்ஷங்கர் ராஜா, ஒரு குத்துப் பாடலுக்கும் இசையமைத்துக் கொடுத்துள்ளார்.

யுவன் இசையமைத்துக் கொடுத்த அந்தப்பாடல் மாஸ் படத்தின் தயாரிப்பாளரான ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல்ராஜாவுக்குப் பிடிக்கவில்லையாம்.

அதை சூர்யாவுக்கும் போட்டுக்காட்டி அவரது மண்டையையும் கழுவி இருக்கிறார்.

உடனே சூர்யாவும் யுவனின் பாடலைப் பிடிக்கவில்லை என்று சொல்லி இருக்கிறார்.

யுவன் இசையமைத்த பாடல் சிறப்பாக இருப்பதாக சொன்ன வெங்கட்பிரபுவின் பேச்சை இருவருமே கேட்கவில்லை.

அதுமட்டுமல்ல, வெங்கட்பிரபுவை மதிக்காமல் இசையமைப்பாளர் தமனை அணுகி, அந்த ஒரு பாடலுக்கு மட்டும் இசையமைக்கக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

அவரும் சம்மதித்து இசையமைத்துக் கொடுத்து விட்டார்.

இதைக் கேள்விப்பட்டதும் யுவன்ஷங்கர் ராஜா கடுப்பாகிவிட்டார்.

அதுமட்டுமல்ல, மாஸ் படத்திற்கு பின்னணி இசையமைக்க மாட்டேன் படத்தின் பப்ளிசிட்டியில் என் பேரை யூஸ் பண்ணக்கூடாது என்றும் சொல்லிவிட்டாராம்.

சூர்யா தரப்புக்கும், யுவனுக்கும் இடையே பஞ்சாயத்துப் பேச வெங்கட் பிரபு முயற்சித்தும் பலன் இல்லை.

யுவன்சங்கர்ராஜாவுக்கு தற்போது மார்க்கெட் இல்லை என்பதால் இதுதான் நல்ல சந்தர்ப்பம் என்று படத்தின் இசையமைப்பாளர் என்று தமன் பெயரை விளம்பரப்படுத்த முடிவு செய்துள்ளனர்.

ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் இதுவரை தயாரித்த 12 படங்களில் பருத்திவீரன், நான் மகான் அல்ல, பிரியாணி, மாஸ் ஆகிய படங்களுக்கு யுவன்சங்கர்ராஜாதான் இசையமைப்பாளர்.

ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தயாரித்த படங்களுக்கு மட்டுமல்ல, சூர்யா மற்றும் கார்த்தி நடித்த பல படங்களின் வெற்றிக்கும் யுவனின் இசை முக்கிய காரணமாக இருந்திருக்கிறது.

அதை எல்லாம் ஒருநொடியில் மறந்துவிட்டு யுவன்சங்கர்ராஜாவுக்கு தற்போது மார்க்கெட் இல்லை என்ற ஒரே காரணத்துக்காக யுவனை அவமானப்படுத்தி உள்ளனர் சூர்யா தரப்பு.

தன் தம்பி யுவனுக்கு எதிராக சூர்யா தரப்பினர்  செய்யும் இந்த சதியை தடுக்கும் எண்ணத்தில் தன்னுடைய ட்விட்டரில் #Yuvan is our #masss music director!!!!!! என்று கூவிக்கொண்டிருக்கிறார் வெங்கட்பிரபு.

ஹீரோவும்… தயாரிப்பாளரும் ஒரே அணியில் இருக்கும்போது இயக்குநரின் குரல் எடுபடுமா?