யுவன்-அனிருத் கூட்டணியின் ‘நீங்க shut up பண்ணுங்க’

1509

ஜெய்-அஞ்சலி நடிக்கும் ‘பலூன்’ தற்பொழுது மற்றோரு பலமான கூட்டணியை அமைத்துள்ளது.

யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகிவரும் இப்படத்தில் தற்பொழுது இசையமைப்பாளர் அனிருத் ஒரு பாடலை பாடியுள்ளார்.

யுவன்-அனிருத் கூட்டணி இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெரும் என நம்பப்படுகிறது.

” ஓவியாவின் பிரபலமான ‘நீங்க shut up பண்ணுங்க’ என்ற வரி எங்களுக்கு தோன்றியது.

இந்த யோசனையை யுவனிடம் கூறியபொழுது அவருக்கும் அது மிகவும் பிடித்திருந்தது.

இதனை அனிருத் பாடினால் அசத்தலாக இருக்கும் என்று கூறினார்.

இது குறித்து தயக்கத்துடன் நான் அனிருத்தை அணுகியபொழுது அவர் மறு யோசனையின்றி உடனே பாட சம்மதித்தார். யுவனும் அனிருத்தும் ஒன்று சேர்ந்து எந்த வித ஈகோவும் இன்றி ஒன்று சேர்ந்து பணியாற்றி கலக்கியுள்ளனர். அவர்கள் இருவரிடையே ஒருவர் மீது மற்றொவர் வைத்திருக்கும் மரியாதை அழகாக இருந்தது. இவர்கள் இருவரின் இந்த அழாகான நட்பு இப்பாடலின் தரத்திலும் குதூகலத்தில் வெளிப்பட்டது.

‘நீங்க shut up பண்ணுங்க’ பாடல் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று கொண்டாடப்படும் என உறுதியாக நம்புகிறேன்.

இப்பாடலின் ப்ரோமோ வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி வெளியிடவுள்ளோம்.

இப்பாடல், திறமை கொண்ட, சாதித்த இரு இளைஞர்கள் ஒன்று சேர்ந்து பணிபுரிய முடியாது என கூறுபவர்களை ‘shut up பண்ணுங்க’ என்பதை உணர்த்தும்.

இப்படத்தின் மற்றொரு பாடலான ‘மழை மேகம் நீயாட’ யுவனின் v பிறந்தநாளான வரும் 31 ஆம் தேதி அன்று வெளியிடவுள்ளோம்” என்கிறார் புதுமுக இயக்குனர் சினிஷ்.