யோகிபாபுக்கு அடுத்தடுத்து தோல்வி

82

சாம் ஆண்டன் இயக்கத்தில் ‘யோகி’ பாபு நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த படம் ‘கூர்கா’.

ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்த டார்லிங், எனக்கு இன்னொரு பேர் இருக்கு, அதர்வா நடித்த 100 ஆகிய படங்களை இயக்கிய சாம் ஆண்டன் இயக்கிய இந்த படத்தில் யோகி பாபுதான் ஹீரோ.

ஆனால் இந்தப்படம் வெளிவருவதற்கு முன்புவரை கூர்கா படத்தில் நான் ஹீரோ இல்லை… காமெடி வேடத்தில்தான் நடிக்கிறேன் என்று மீடியாக்களிடம் கற்பூரத்தை அணைக்காதகுறையாக சத்தியம் செய்து வந்தார்.

ஆனால் கூர்கா படத்தில் அவர்தான் ஷாட் பை ஷாட் இருந்தார்.

இதேபோல் சில வாரங்களுக்கு முன் வெளியான தர்மபிரபு படத்திலும் யோகிபாபுதான் ஹீரோ.

அந்தப்படம் வெளிவருவதற்கு முன்புவரை தர்மபிரபு படத்தில் 15 நிமிடங்கள் மட்டுமே நான் தலைகாட்டுகிறேன் என்று சொல்லிவந்தார்.

ஹீரோவாக நடித்துவிட்டு, அதற்கு மாறாக மீடியாக்களிடம் எதற்காக யோகிபாபு இப்படி பச்சைப்பொய்யை சொல்கிறார் என்பதுதான் புரியவில்லை.

இது ஒரு பக்கம், இருக்க, யோகி பாபு கதாநாயகனாக நடித்து சமீபத்தில் வெளியான ‘தர்மபிரபு’ படத்தை தொடர்ந்து கூர்கா படமும் யோகி பாபுவுக்கு வெற்றியைத் தேடிக்கொடுக்கவில்லை.

ஹீரோவாக உயர நினைத்தவருக்கு இரண்டு படங்களும் வணிகவெற்றியைப் பெறாமல்போனதால் பெரும் சோகத்தில் இருக்கிறாராம் யோகிபாபு.