கூத்துப்பட்டறை To கோடம்பாக்கம்…! – ‘யானும் தீயவன்’ ஹீரோ அஸ்வின்…!

1911

ஸோஃபியா ஜெரோம் மற்றும் பெப்பிட்டா ஜெரோம் இருவரும் “பெப்பி சினிமாஸ்” சார்பாக இணைந்து தயாரிக்கும் படம் – யானும் தீயவன்.

சிம்பு நடித்த போடா போடி மற்றும் இயக்குநர் ஹரியிடம் “சிங்கம் 2” படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய பிரசாந்த் இப்படத்தை இயக்குகிறார்.

நாளைய இயக்குனர் சீசன் – 3 ல் பங்கேற்று பலரது பாராட்டுக்களையும் பெற்றவர் இவர்.

யானும் தீயவன் படத்தில் புதுமுகம் அஸ்வின் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவர் பிரபல இசையமைப்பாளரும், முன்னணி வழக்கறிஞருமான ஜெரோம் புஷ்பராஜின் மகன்.

என்ஜினியரிங் படித்துவிட்டு இன்போசிஸ் நிறுவனத்தில் வேலைபார்த்த அஸ்வின், நடிப்பு மீது கொண்ட விருப்பத்தினால் வேலையை உதறிவிட்டு நடிகராக களமிறங்குகிறார். நடிப்பை முறைப்படி கற்று வர வேண்டும் என்பதற்காக கூத்துப்பட்டறையில் பயிற்சி எடுத்துள்ளார்.

நடனமும் கற்றுள்ள அஸ்வின் சொந்தமாக ஒரு நடனக்குழுவையும் வைத்திருக்கிறாராம்.

ராம்போ விமல் மாஸ்டரிடம் சண்டைப்பயிற்சி, ஜிம் என ஒரு ஹீரோவுக்குத் தேவையான அத்தனை தகுதிகளையும் வளர்த்துக் கொண்டு களத்தில் இறங்கி இருக்கிறார்.

சில தெலுங்குப் படங்களில் நடித்த வர்ஷா கதாநாயகியாக நடிக்கின்றார்.

டான்ஸ் மாஸ்டர் ராஜு சுந்தரம் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்.

விடிவி கணேஷ், பொன்வண்ணன்  முக்கிய கதாபாத்திரங்களில்  நடிக்கின்றனர்.

பிரபல தெலுங்கு திரையுலக இசையமைப்பாளரான அச்சு ராஜாமணி, இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

ஒளிப்பதிவு ஷ்ரேயாஸ் கிருஷ்ணா, படத்தொகுப்பு பிரசன்னா.G.K. பாடல்களை பாடலாசிரியர்கள் கபிலன் மற்றும் மணி அமுதவன் எழுதியுள்ளனர்.

சரி.. கதை?

“இது ஒரு உண்மைசம்பவத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட கதை.

15 ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திராவில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

ஒரு இளம் ஜோடியான ஹீரோவும் ஹீரோயினும் கெட்ட ஒரு கும்பலிடம் சிக்குக்கிறது.

சூழ்நிலை காரணமாக நல்லவனாக இருந்த ஹீரோ கெட்டவனாகிறார்.

அதன் பிறகு நடக்கும் பரபர சம்பவங்கள் தான் படம்!

இது கேங்ஸ்டர் கதை என்றாலும் மற்ற கேங்ஸ்டர் கதைகளிலிருந்து இப்படம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்

திரைக்கதை சுவாரஸ்யமாகவும் புதுசாகவும் இருக்கும்.

எந்த விஷயத்திலும் அவசரம் கூடாது. பொறுமையும் நிதானமும் முக்கியம் என்பதை சொல்லும் படம் ” என்கிறார்  இயக்குனர் பிரசாந்த்.

“முழுக்க முழுக்க கமர்சியல் ஆக்ஷன் திரில்லராக உருவாகும் “யானும் தீயவன்” படத்தின் பாடல்கள் படத்திற்கு பெரிய பலமாக அமையும்” என்றும் ஒவ்வொரு பாடலும் புதிய கோணத்தில் எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறுகிறார்.

படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது.

விரைவில் திரைக்கு வருகிறது – யானும் தீயவன்.