‘விஜய்-63’ ஃபர்ஸ்ட்லுக் எப்போது?

114

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘விஜய்-63’ படம் நிறுவனம் பிரம்மாண்டமான முறையில் தயாராகி வருகிறது.

இந்த படத்தில் விஜய்யுடன் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க, இவர்களுடன் கதிர், விவேக், யோகி பாபு, ஆனந்த்ராஜ், சௌந்தர் ராஜா, பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப் உட்பட பலர் நடிக்கின்றனர். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்தப்படம் தீபாவளிக்கு ரிலீசாக இருப்பதால் படவேலைகள் படு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

ஒரு பக்கம் மீனாம்பாக்கம் பின்னி மில்லில் போடப்பட்ட செட்டிலும், இன்னொரு பக்கம் இவிபி ஸ்டுடியோவில் போடப்பட்ட கால்பந்தாட்ட மைதானம் செட்டிலும் மாறிமாறி படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்த இரண்டு இடங்களிலும் தொடர்ச்சியாக 105 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22-ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் லேட்டஸ்ட் தகவல்… விஜய் 63 படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22-ஆம் தேதி வெளியிடுவதற்கு பதிலாக 4 நாட்கள் முன்னதாக ஜூன் 18 அன்றே வெளியிட இருப்பதாக தகவல் அடிபடுகிறது.

விஜய்யின் அறிவுறுத்தலின்பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.