எழுத்தாளர்கள் சங்கத்தில் என்ன நடக்கிறது?

964

எழுத்தாளர்கள் சங்கத்தில் தற்போது நிலவும் பிரச்சனைகள் குறித்து இயக்குநர் விசு தெரிவித்துள்ள கருத்துக்கள் வாட்ஸ்அப்பில் வைரலாகியுள்ளது.

அவர் தெரிவித்துள்ள கருத்துக்கள்…

அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படுபவன் நான் அல்ல …

சொந்த முயற்சியில் எத்தனையோ vv நற்பணிகளை ‘அரட்டை அரங்கம்’ மூலமாகவும் ‘மக்கள் அரங்கம்’ மூலமாகவும் என்னால் செய்ய முடிந்திருக்கிறது என்பதை நாடறியும் ..

Dialysis எனும் ரத்த சுத்திகரிப்பு நோயுடன் 6 வருடங்களாகப் போராடிக் கொண்டிருக்கும் நான், இன்றைய தேதியிலும், இந்த 2018 ம் வருஷத்திலும், மாணவ மாணவிகளின் படிப்புக்காக எங்கள் ‘விசு எஜுகேஷனல் டிரஸ்ட்’ மூலம் லஷக்கணக்கில் பணம் நன்கொடை வழங்கி இருக்கிறேன் .. என்பதையும், இனியும் வழங்குவோம் என்பதையும், வருமான வரி அலுவலகத்துக்கு நாங்கள் சமர்ப்பிக்க இருக்கும் கணக்குப்புத்தகங்கள், ஆவணங்கள் சொல்லும் .. 7/8/2003 அன்று ஆரம்பிக்கப்பட்ட அந்த டிரஸ்டுக்கு நான் Founder and Managing Trustee ..

அன்று முதல், 15 வருடங்களாக அந்த ‘விசு எஜுகேஷனல் டிரஸ்டி’ ல் மாணவ மாணவிகளுக்கு நன்கொடை தவிர, ஒரு entry கூட, ஒரு நயாபைசா கூட, செலவு வகையில் எழுதப்படவில்லை என்பதையும், அதே கணக்கு புத்தகங்கள், ஆவணங்கள் பறை சாற்றும் .. மற்ற செலவு எல்லாமே இறைவன் எனக்களித்த பிச்சையிலிருந்து, என் சொந்த செலவு தான் ..

தயாரிப்பாளர் சங்கத்தில் எந்த ஒரு தயாரிப்பாளரிடமும் எனக்கு பஞ்சாயத்து என்று ஒன்று என்றும் வந்ததில்லை .. நேற்றும், இன்றும், நாளையும் அவர்கள் எனக்கு முதலாளிகளே ..

உரிமை என்பது வேறு; போராடுவேன் .. மரியாதை என்பது வேறு; கொடுக்க தவற மாட்டேன் .. எழுத்தாளர் சங்க கட்டிட பத்திரத்தை பணம் கொடுத்து மீட்ட போதும், அதை புதுப்பித்து கட்டிய போதும் பெருமளவில் பணம் உதவி, முதலில் நின்றவன் நான் என்பது பொதுக்குழுவிலேயே உறுதி செய்யப்பட்டது …. 10 வருடங்கள் தலைவராக இருந்திருக்கிறேன் ..

காலணா conveyance கூட வாங்கியதில்லை . சங்கப்பணத்தில், இந்த ஓட்டலில் சிக்கன் , அந்த ஓட்டலில் மட்டன் என விதவிதமாக டின் கட்டும், பழக்கம் எனக்கு கிடையாது ..

வீட்டிலிருந்து டிபன் பாக்சில் கொண்டு வருவது தான் ..

என் நற்பெயருக்கு அன்று எங்கள் கமிட்டியில் இருந்து, இன்று உங்கள் கமிட்டியிலும் இருக்கும் யார் கண்ணன், பிரபாகர், ஹேமா போன்ற நல்லவர்கள் நற்சான்றிதழ் வழங்குவார்கள் .. இறைவன் அருள் ஆசி என்றும் பரிபூரணமாக எனக்கு இருந்திருக்கிறது .. ..

சரி .. அவர்கள் கூறிய அந்த ‘எழுத்தாளர் டிரஸ்ட்’ டில் நான் ஒரு சாதாரண டிரஸ்டிதான் .. பணத்தை தொடும் அதிகாரம் எனக்கு கிடையாது ..

பெயர் இருக்கிறது அல்லவா? அதனால் என்னை வம்புக்கு இழுக்கிறார்கள் .. பணம் கிட்டத்தட்ட 40 லஷம் ரூபாய் பொது உடமை ஆக்கப்பட்ட அரசாங்கம் சார்ந்த வங்கியில் உள்ளது .. வங்கி அனுமதித்தால்,

நான் எப்போது வேண்டுமானலும் போய் entry ஐ எட்டிப்பார்க்கலாம் .. பார்க்கலாம் .. ஆனால் தொட இயலாது .. அதற்கு முதல் பத்து லஷம் ‘நலிந்த கலைஞர்களுக்கு உதவ’ என்று specific ஆகச்சொல்லி, என் ஜாகர்த்தா நண்பர் திரு திரிசக்தி சுந்தர ராமன் நன்கொடை கொடுத்தார் …

2 வருடங்களாக மூத்த எழுத்தாளர்களுக்கு மாதாமாதம் pension வழங்கி கொண்டிருக்கிறோம் என்பதற்கு அந்த மூத்த எழுத்தாளர்களே சாட்சி சொல்வார்கள் .. மருந்துக்கும் மாத்திரைக்கும் கூட போராடும் சிலர் அதில் அடக்கம் .. அந்த பணத்தில் ‘நட்சத்திர கலை விழா’ நடத்தி தங்கள் தாகத்துக்கு காசு பார்க்க ஒரு கூட்டம் அலைகிறது .. முடியுமா? நடக்குமா? டிரஸ்டுக்கு என தனி டிரஸ்டிக்கள் உண்டு .. அப்படி யாரிடமோ வாங்கிய பணத்தை யாரிடமோ, யாரோ ஒப்படைக்க முடியாது ..

சட்டம் சம்மதிக்காது .. இயங்கிக் கொண்டிருக்கும் தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகிய மூவருக்கும் டிரஸ்டில் இடம் உண்டு என்று சொல்லி பார்த்தோம் .. நரிக்கூட்டம் மசியவில்லை .. (இப்போதும் அதற்கு தயார்) ..

பாக்கியராஜ் அவர்கள் பெயரையும், மனோஜ் குமார் அவர்கள் பெயரையும் முன்னே வைத்து, ஆங்காங்கே சங்கங்களின் பணத்தைத் தின்றே உடல் வளர்த்த சில பிணம் தின்னும் ஓநாய்கள் இந்த டிரஸ்ட் பணத்திற்குப் பின்னாலும் வட்டமடிக்கின்றன .. ..

குருவி போல் சேர்த்த பணத்தை காக்க, நல்லவர்களிடம் மட்டுமே அதை ஒப்படைக்க, இயலாத வயதிலும் தளராத போராட்டம் நடத்தி கொண்டிருக்கிறேன் .. சட்டமும் நீதியும், உண்மை நியாயம் பக்கம் தான் இருக்கும் என்ற நம்பிக்கையுடன், என் பெயரை களங்கப்படுத்த முயற்சி செய்ததற்காக நீதித்துறையை நாட இருக்கிறேன் .. ..

இதுவே உலவிக்கொண்டிருக்கும் ஒரு whats app க்கு.என் பதில் .. சத்தியத்தை மட்டுமே நம்பும், எழுத்தாளர் சங்க நலம் விரும்பி .. ‘விசு’