விஸ்வரூபம் 2 படத்தின் கட் லிஸ்ட்… Comments Off on விஸ்வரூபம் 2 படத்தின் கட் லிஸ்ட்…

கமல்ஹாசன் தயாரித்து, இயக்கியுள்ள விஸ்வரூபம் 2 படம் நாளை அதாவது, ஆகஸ்ட் 10-ம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகிறது.

படவெளியீட்டுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டநிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் மறைவு காரணமாக விஸ்வரூபம்-2 படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்படலாம் என்ற கருத்து திரையுலகில் நிலவியது.

இன்னொருபக்கம், பிரமிட் சாய்மீரா பட நிறுவனம் விஸ்வரூபம் – 2 படத்துக்கு தடை கேட்டு வழக்கு தொடர்ந்தது.

இதனால் திட்டமிட்டபடி விஸ்வரூபம் – 2 படம் வெளியாகுமா? என்ற குழப்பம் நீடித்தது.

தற்போது விஸ்வரூபம்-2 படம் ஆகஸ்ட் 10-ந்தேதி உறுதியாக வெளியாகவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றினால், வசூல் கடுமையாக பாதிக்கும் என்பதால் அப்படத்தை வாங்கியுள்ள விநியோகஸ்தர்கள் இந்த முடிவை எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

இதற்கிடையில், விஸ்வரூபம்-2 படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கிய திரைப்பட தணிக்கைக்குழு 22 இடங்களில் கட் கொடுத்திருப்பதோடு, பல காட்சிகளின் வசனங்களையும் ஒலிநீக்கம் (மியுட்) செய்திருக்கிறதாம்.

விஸ்வரூபம்-2 படத்தில் ஆட்சேபத்துக்குரிய வசனங்கள், காட்சிகள் இருந்ததால் இவ்வளவு கட் கொடுக்கப்பட்டதாக தகவல்.

விஸ்வரூபம்-2 படத்தின் கட் லிஸ்ட் இதோ…

cut list details1

Previous ArticleNext Article

Editor Picks

Read previous post:
விஸ்வரூபம் 2 படத்துக்கு தடைகேட்ட வழக்கு தள்ளுபடி

Close