மனைவி-காதலிக்கு இடையே மாட்டிக்கொண்ட ‘விஷமக்காரன்’

116

ஹனி பிரேம் ஒர்க்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் விஷமக்காரன்.

இந்தப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளதுடன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார் அறிமுக நடிகர் வி (விஜய் குப்புசாமி).

அனிகா விக்ரமன் மற்றும் வலிமை புகழ் சைத்ரா ரெட்டி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். வரும் மே-27ஆம் தேதி இந்தப்படம் வெளியாக இருக்கிறது.

பொதுவாகவே ஒரு வெற்றிப்படத்திற்கான கதை எப்படி இருக்க வேண்டும், அதற்கான பட்ஜெட் எந்த அளவுக்குள் இருக்கவேண்டும் என்பதை கணிப்பதில் தான் பலர் கோட்டை விடுகின்றனர்.
ஆனால் இந்தப்படத்தின் இயக்குனரான வி, ஐடி துறையில் பணிபுரிந்த அனுபவம் கொண்டவர் என்பதால் இதற்காக தனியாக ‘ஹனிபிலிக்ஸ்’ என்கிற ஒரு சாப்ட்வேரையே உருவாக்கினார்.

ஒரு படம் துவங்குவதற்கு தேவையான பட்ஜெட், ஸ்க்ரிப்ட், கால்ஷீட், செலவுகள் என அனைத்தையும் இந்த சாப்ட்வேரே உருவாக்கி தந்து விடுமாம். ஆச்சர்யமாக இந்த சாப்ட்வேர் வகுத்து கொடுத்த திட்டத்தின்படி, திட்டமிட்ட பட்ஜெட்டுக்குள், 13 கால்ஷீட்டுகளிலேயே மொத்தப்படத்தையும் முடித்துவிட்டார் இயக்குனர் வி.

சொல்லப்போனால் இந்த சாப்ட்வேரை சோதனை செய்வதற்காக இந்தப்படத்தை உருவாக்கியுள்ளார்கள் என்றுகூட சொல்லலாம்.. அதுமட்டுமல்ல. இந்தப்படம் வெளியான பின்பு, மற்ற அனைவரும் இந்த சாப்ட்வேரை பயன்படுத்திக்கொள்ளும் விதமாக இலவசமாகவே வழங்கவும் முடிவு செய்தனர்.

அந்தவகையில் கடந்த மாதம் இயக்குனர் மணிரத்னம், தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன், நடிகர் பிரசாந்த் உள்ளிட்ட பிரபலங்களின் முன்னிலையில் இந்த சாப்ட்வேர் வெளியிடப்பட்டது. திரைப்பட உருவாக்கத்திற்கு இப்படி ஒரு சாப்ட்வேரா என ஆச்சர்யப்பட்ட பிரபலங்கள் தாங்களும் இதை பயன்படுத்தி பார்ப்பதாக படக்குழுவினரை உற்சாகமூட்டினார்கள்.

மேனிபுலேஷன் அதாவது “மனிதர்களை தங்களுக்கு ஏற்றபடி திறமையாக கையாளுதல்” என்பதை மையக்கருவாக வைத்து இந்தப்படம் உருவாகியுள்ளது. மனிதர்களின் வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களுக்கு தீர்வு சொல்லும் வாழ்க்கை பயிற்சியாளராக நடித்துள்ளார் நாயகன் வி.

தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம்

ஒளிப்பதிவு : ஜெ கல்யாண்

இசை : கவின்-ஆதித்யா

படத்தொகுப்பு : எஸ்.மணிக்குமரன்

இயக்கம் : வி