வரலட்சுமி உடன் திருமணம்… ஊரறிய உறுதி செய்த விஷால்…

2269

நடிகர் விஷாலுக்கும், சரத்குமாரின் மகள் வரலட்சுமிக்கும் இடையிலான காதல் உலகறிந்த சமாச்சாரம்தான்.

என்றாலும் அதை விஷால், வரலட்சுமி இருவருமே அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

வழக்கம்போல் “நாங்க நல்ல ப்ரண்ட்ஸ்” என்று இருவருமே காமெடி பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

இன்னொரு பக்கம்,  டேஷ் லட்சுமியா.. லட்சுமி டேஷா என்கிற ரீதியில் தன்னுடைய காதலி வரலட்சுமி அல்லது லட்சுமிமேனன் என்று விஎஸ்ஓபி படத்தில் தானே கிசுகிசுவையும் கிளப்பினார் விஷால்.

என்னதான் திசைதிருப்பினாலும் விஷால் – வரலட்சுமி இருவருக்கும் இடையிலான காதல் திரையுலகம் அறிந்ததுதான்.

கோட்டூர்புரத்தில் தனி வீடு எடுத்து இருவரும் சில காலம் லிவிங் டு கெதர் வாழ்க்கை வாழ்ந்ததாகவும் கூட திரைத்துறையில் பேச்சு உண்டு.

கடந்த வருடம்வரை விஷால் செல்லுமிடமெல்லாம் வரலட்சுமியும் தவறாமல் இருப்பார்.

நடிகர் சங்க செயலாளர் ஆன பிறகு வரலட்சுமி உடன் பொது இடங்களில் தலைகாட்டுவதை குறைத்துக்கொண்டார் விஷால்.

இந்நிலையில் நடிகர் சங்க கட்டிட நிதி திரட்டுவதற்காக சன் டிவியில் ஒளிபரப்பான சிறப்பு நிகழ்ச்சியில் விஷாலின் திருமணம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த விஷால், அடுத்த வருடம் திருமணம் என்றும், நடிகர் சங்கத்தில் கட்டப்பட உள்ள திருமண மண்டபத்தில் நடைபெறும் முதல் திருமணம் என்னுடைய திருமணம்தான் என்று பதில் அளித்தார்.

அதோடு விட்டிருந்தால் இந்த செய்திக்கே அவசியம் இருந்திருக்காது.

தன்னுடைய பதிலில் விஷால் வைத்த பன்ச்சைக்கேட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நட்சத்திரங்கள் ஆரவாரம் செய்தனர்.

விஷால் சொன்ன பதில் என்ன?

“நான் கட்டிக்கப்போற பொண்ணு ‘லட்சுமி’கரமான பொண்ணா இருக்கும்.”