பிரபுதேவா தயாரிப்பில் முதல் படம் ‘வினோதன்’…!

1215

பிரபுதேவா தயாரிக்கும் மூன்று படங்களில் ஒன்று – ‘வினோதன்’.

புதிய இயக்குநர் விக்டர் ஜெயராஜ் இயக்கும் இப்படத்தில் ஐசரி வேலனின் பேரன் வருண் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

எடிட்டர் ஆண்டனி இயக்கத்தில் வெளி வர உள்ள ‘நைட் ஷோ’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் இவர்.

கதாநாயகி தேர்வு நடைபெற்று வருகிறது.

இமான் இசை அமைக்கும் இப்படத்துக்கு மதன் கார்க்கி பாடல்களை எழுதுகிறார்.

‘வினோதன் ‘ படத்தை பற்றி இயக்குநர் விக்டர் ஜெயராஜ் என்ன சொல்கிறார்?

” ‘வினோதன்’ ஒரு வித்தியாசமான மன நிலை உள்ள மனிதனை பற்றியும் அவனது வினோதமான பழக்கங்களையும் பற்றிய உண்மை கதை.

பொதுவாக தமிழ்ப்படங்களில் மன ரீதியான கதாபாத்திரங்களை பற்றி விவரிக்கும் போது, அந்த கதாபாத்திரங்கள் சரியாக சித்தரிக்கப்படவில்லையோ என்று நினைப்பேன்.அந்தக் குறையை ‘வினோதன்’ நிவர்த்தி செய்யும். ‘வினோதன்’ படத்தில் கதாநாயகனின் குணாதிசயம் தமிழ்ப்படங்களில் இதுவரை பார்த்திராதது. ‘நைட் ஷோ’ படத்தில் ஒரு முக்கிய கதா பாத்திரத்தில் அறிமுகமாகும் வருணுக்கு நடிப்பு பயிற்சி அளிக்கவே அவரை நான் முதலில் சந்தித்தேன். அந்த நேரத்தில்தான் ‘வினோதன்’ கதையை எழுதி கொண்டு இருந்தேன். வருணை சந்தித்ததில் இருந்தே அந்த கதாபாத்திரத்தை பற்றி யோசிக்கும் போது அவரது முகம்தான் எனக்கு வர ஆரம்பித்தது. இருந்த போதிலும் மற்றவர்களும் என் கருத்தை ஆமோதிகட்டும், முக்கியமாக தயாரிப்பாளர் பிரபு தேவா ஓகே சொன்னால் போதும் என்று இருந்தேன்.

‘நைட் ஷோ’ படத்தின் பிரத்தியேக காட்சியை பார்த்த பிறகு என் கருத்தே அனைவரது கருத்தும் என்று அறிந்த போது எனக்கு பெரிய நிம்மதி. தயாரிப்பாளர் பிரபுதேவாவும் சூப்பர் என்று சொன்னார்.

‘வினோதன்’ படம் மூலமாக என்னை இயக்குனராக உயர்த்திய பிரபு தேவாவுக்கு நான் மிகவும் கடமை பட்டு இருக்கிறேன்.”

என்று சொல்லும் விக்டர் ஜெயராஜ், இயக்குனர் விஜய்யிடம் பாடம் பயின்றவர்.

ஓ… அப்படியா? இது உங்க சொந்த சரக்குதானே?