தமிழில் வெளியாகும் ராம் சரணின் படம் Comments Off on தமிழில் வெளியாகும் ராம் சரணின் படம்

ராம் சரண் கதாநாயகனாக நடிக்கும் தெலுங்கு படமான ‘வினயை விதேயா ராமா’ தமிழில் வெளியாகிறது.

தெலுங்கு படஇயக்குனர் போயப்பட்டி சீனு இப்படத்தை இயக்குகிறார்.

‘பாரத் என்னும் நான்’ என்ற படத்தில் நடித்து தெலுங்கு ரசிகர்களின் மனதை கவர்ந்த கியாரா அத்வானி கதாநாயகியாகவும் விவேக் ஓப்ராய் வில்லனாகவும் நடிக்கிறார்கள்.

மேலும் பிரசாந்த், சினேகா, மதுமிதா, முகேஷ் ரிஷி, ஜெபி, ஹரீஷ் உத்தமன், ஆர்யன் ராஜேஷ், ரவி வர்மன் நடிக்கிறார்கள்.

குடும்ப பின்னணியில் காதல், கலகலப்பு, அரசியல், செண்டிமெண்ட், வன்முறை, சாஹசம் என்று பொழுது போக்கு அம்சங்கள் அனைத்தும் ஒருங்கிணைந்த படமாக ‘வினயை விதேயா ராமா’ உருவாகியுள்ளது.

தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்க ரிஷி பஞ்சாபி, பண்டி ரமேஷ் ஆகியோர் ஒளிப்பதிவு மேற்கொண்டுள்ளனர்.

இப்படத்தின் பாடல் காட்சிகள் அரங்குகளில் படமாக்கப்பட்டுள்ளது.

கிளைமாக்ஸ் சண்டை காட்சி படம் படமாக்க மட்டும் பதினோரு கோடி ரூபாய் சிலவிடப்பட்டுள்ளது.

கனல் கண்ணன் சண்டை பயிற்சி அளித்துள்ளார்.

டி வி வி என்டர்டைன்மெண்ட்ஸ் தயாரித்து பிரகாஷ் பிலிம்ஸ் வழங்கும் ‘வினயை விதேயா ராமா’ பிப்ரவரி முதல் வாரம் தமிழ்நாடு மற்றும் கேரளமெங்கும் வெளியாகிறது.

Previous ArticleNext Article

Editor Picks

Read previous post:
வன்முறை ரசிகர்கள்! – வாய் திறப்பாரா அஜீத்?

Close