சண்டகாரியாக மாறிய மைபாஸ்

98

ஒருகாலத்தில் இயக்குனர் ஷங்கருக்கு வலது கரமாக இருந்தவர் ஆர்.மாதேஷ். தன்னிடம் உதவியாளராக இருந்த இவருடன் இணைந்துதான் முதல்வன் படத்தையே தயாரித்தார் ஷங்கர்.

அவரிடமிருந்து வெளியேறி, விஜய் நடித்த மதுர படத்தை இயக்கியவர், தொடர்ந்து, விஜயகாந்த் நடித்த ‘அரசாங்கம்’, த்ரிஷா நடித்த ‘மோகினி’ ஆகிய படங்களைத் தயாரித்தார்.

‘மோகினி’ படத்தை தொடர்ந்து ‘சண்டகாரி-தி பாஸ்’ என்ற படத்தை இயக்கி வருகிறார் ஆர்.மாதேஷ்.

மலையாளத்தில் திலீப், மமதா மோகன்தாஸ் நடித்து, ஜித்து ஜோசஃப் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘மை பாஸ்’ என்ற படத்தின் ரீமேக்தான் இந்தப்படம்.

இந்த படத்தில் விமல், ஸ்ரேயா முதன் முதலாக இணைந்து நடிக்கிறார்கள்.

ஆக்ஷன், காமெடி படமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடைபெற்றுள்ளது. எஞ்சிய காட்சிகளின் படப்பிடிப்பு இப்போது கேரளாவில் நடந்து வருகிறது.