விக்ரம் – பா. ரஞ்சித் இணையும் படத்தின் தொடக்க விழா

102

விக்ரம் நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத படத்தின் தொடக்க விழா சென்னையில்நடைபெற்றது.

விரைவில் வெளியாக இருக்கும் ‘கோப்ரா’, ‘பொன்னியின் செல்வன்: எனும் இரண்டு அகில இந்திய அளவிலான படங்களை தொடர்ந்து, விக்ரம் நடிப்பில் தயாராகும் பெயரிடப்படாத புதிய படத்தினை முன்னணி இயக்குநர் பா. ரஞ்சித் இயக்குகிறார்.

இந்த படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில் நடிகர்கள் சிவகுமார், ஆர்யா, தயாரிப்பாளர்கள் டி. சிவா, எஸ்.ஆர். பிரபு, அபினேஷ் இளங்கோவன், சி.வி.குமார், இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்த படத்தின் கதை, திரைக்கதையை தமிழ் பிரபா எழுத, ஒளிப்பதிவை கிஷோர் குமார் கவனிக்கிறார்.

‘இசை அசுரன்’ ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கும் இந்த படத்தை எடிட்டர் செல்வா தொகுக்கிறார்.

சண்டை காட்சிகளை அன்பறிவு அமைக்க, நடனங்களை சாண்டி மேற்கொள்கிறார்.

இப்படத்தின் பாடல்களை கபிலன், அறிவு, உமாதேவி ஆகியோர் எழுதுகிறார்கள்.

‘அட்டக்கத்தி’, ‘மெட்ராஸ்’, ‘கபாலி’, ‘காலா’, ‘சர்பட்டா பரம்பரை’ என தொடர்ந்து வெற்றிப் படைப்புகளை அளித்து, கவனம் ஈர்க்கும் இயக்குநரான பா. ரஞ்சித்தின் இயக்கத்தில், முதன்முறையாக விக்ரம் கதையின் கதாநாயகனாக நடிப்பதால்..

இந்த படத்துக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.