சொந்தப்படம் தயாரிக்கும் விஜய்சேதுபதி…

64

ஏற்கனவே ‘ஆரஞ்சு மிட்டாய்’ என்ற படத்தை தயாரித்தார் விஜய்சேதுபதி. அந்தப்படம் மிகப்பெரிய தோல்வியடைந்து அவருக்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டது.

அதன் பிறகு மேற்கு தொடர்ச்சிமலை என்ற படத்தை தயாரித்தார்.

அந்தப்படத்தை வெளியிடாமலே வருடக்கணக்கில் போட்டு வைத்தவர், பல வருடங்கள் கழித்து ஒரு விநியோகஸ்தரிடம் கொடுத்து அந்தப்படத்தை ரிலீஸ் செய்ய வைத்தார்.

மேற்கு தொடர்ச்சிமலை வெற்றிப்படமாக அமைந்தும் விஜய்சேதுபதிக்கு லாபம் கிடைக்கவில்லை.

அதன் பிறகு ஜுங்கா என்ற படத்தை தயாரித்தால். அந்தப்படத்தினால் அவருக்கு 15 கோடி நஷ்டம் ஏற்பட்டது.

இந்நிலையில், ‘சென்னை பழனி மார்ஸ்’ என்ற படத்தை தயாரிக்கிறார்.

விஜய்சேதுபதியை வைத்து ‘ஆரஞ்சு மிட்டாய்’ படத்தை இயக்கிய பிஜு இப்படத்தை இயக்குகிறார்.

டிராவல் ஸ்டோரியாக உருவாகும் இந்த படத்தில் முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடிக்கிறார்கள்.

ப்ளாக் காமெடி ஜானரில் உருவாகும் ‘சென்னை பழனி மார்ஸ்’ கமர்ஷியல் படம் இல்லையாம்.

ஆனாலும் விஜய்சேதுபதி இந்த படத்தை தயாரிக்க முன் வந்தது ஏன்? சொந்தப்படத்தயாரிப்பில் தொடர்ந்து நஷ்டம் அடைந்து வரும் விஜய்சேதுபதி மீண்டும் மீண்டும் படம் தயாரிப்பது ஏன்? என்பதுதான் புரியவில்லை.

புரிந்தவர்களுக்கு புரியும்…