படத்தை ஓடவைக்க விஜய்ஆண்டனியின் பலே மாஸ்டர் பிளான்

96

விஜய் ஆண்டனி நடித்து வெளியான படங்கள் அடுத்தடுத்து தோல்வியைத் தழுவி வருகின்றன. கடைசியாக அவர் நடித்த திமிரு புடிச்சவன் படம் மிகப்பெரிய தோல்விப்படம்.

எனவே நடிப்பை கைவிட்டு மீண்டும் இசையமைப்பாளராகிவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டநிலையில் வரிசையாக புதிய படங்களை கமிட் பண்ணி வருகிறார். அட்வான்ஸ் வேண்டாம், 3 கோடி சம்பளம் போதும் என்று சலுகை வேறு அளிக்கிறார்.

அதேநேரம் தன்னுடைய படங்கள் படு தோல்வியடையாமல் சுமாரான வெற்றியைப் பெற வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறார்.

அதற்காக இன்னொரு பிரபல ஹீரோவை தன்னுடைய படத்தில் இழுத்துப்போட்டுக்கொள்கிறார்.

விஜய் ஆண்டனி தற்போது கதாநாயகனாக நடித்துவரும் ‘அக்னி சிறகுகள்’ படத்தில் அருண் விஜய் இன்னொரு ஹீரோக நடித்து வருகிறார்.

விஜய் ஆண்டனியின் மற்றொரு படமான கொலைகாரன் படத்தில் முக்கிய வேடத்தில் அதாவது போலீஸ் அதிகாரி வேடத்தில் அர்ஜுன் நடித்துள்ளார்.

தற்போது தொடங்கப்பட்டுள்ள காக்கி படத்தில் ஜெய் இன்னொரு ஹீரோக ஒப்பந்தம் செய்துள்ளார்.

தனக்காக ரசிகர்கள் படம் பார்க்க வரவில்லை என்றாலும், உடன் நடிக்கும் மற்ற ஹீரோக்களுக்காக தியேட்டர்களுக்கு வருவார்கள் என்பது விஜய் ஆண்டனியின் கணக்கு.

தன்னுடைய படத்தை ஓட வைக்க எப்படி எல்லாம் மாஸ்டர் பிளான் போடுகிறார் பாருங்கள்.

பலே விஜய் ஆண்டனி.