விஜய்சேதுபதி-அமலாபால் நடிக்கும் படத்தை துவக்கிவைத்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன்

67

அறிமுக இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில் விஜய்சேதுபதி அமலாபால் நடிக்கும் புதிய படம் VSP 33

விஜய்சேதுபதி அமலாபால் முதன்முறையாக இணைந்து நடிக்கின்றனர்.

இப்படத்தை சந்திரா ஆர்ட்ஸ் சார்பாக இசக்கி துரை தயாரிக்கிறார்.

பேராண்மை, புறம்போக்கு படங்களில் இயக்குநர் எஸ்.பி ஜனநாதனிடம் பணியாற்றிய வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

தனது உதவியாளர் இயக்குநராக அறிமுகமாகும் இப்படத்தை எஸ்.பி ஜனநாதன் க்ளாப் அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைக்கிறார்.

விஜய் சேதுபதி நடிக்கும் 33 வது படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது.

தொடர்ந்து படக்குழுவினர் ஊட்டிக்கு சென்று படப்பிடிப்பை தொடர திட்டமிட்டுள்ளனர்.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு வருடம், காதல், இசை என கொண்டாட்டங்களை உள்ளடக்கிய இந்த கதையில் சர்வதேச அளவிலான பிரச்சனையும் மையமாக பேசப்பட இருக்கிறது.

இதில் விஜய்சேதுபதி இசை கலைஞராக நடிக்கிறார்.

இப்படத்தில் முன்னணி கதாநாயகி மற்றும் ஒரு வெளிநாட்டு பெண்ணும் கதாநாயகிகளாக நடிக்கவுள்ளனர்.

இதில் நடிக்க இருக்கும் நடிகர் நடிகைளை புது வித பாணியில் அறிமுகப்படுத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.