‘விஜய்-63’ படத்தின் தயாரிப்பாளர் செய்த உதவி

43

’அம்மணி’ படத்தை தொடர்ந்து நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியுள்ள படம் ‘ஹவுஸ் ஓனர்’.

இந்த படத்தில் ‘பசங்க’ கிஷோர் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

நடிகை விஜி சந்திரசேகரின் மகள் லவ்லின் கதாநாயகியாக இந்தப்படத்தில் அறிமுகமாகியுள்ளார்.

‘ஆடுகளம்’ கிஷோர் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

அனைத்து வேலைகளும் முடிவடைந்த இப்படம் பல மாதங்களாக முடங்கிக் கிடந்தது.

லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய முந்தைய படங்கள் வணிகரீதியில் வெற்றியடையவில்லை.

எனவே ஹவுஸ் ஓனர் படத்தை விநியோகஸ்தர்கள் வாங்க ஆர்வம் காட்டவில்லை.

நீண்டகால தயாரிப்பாக பல மாதங்களாக முடங்கிக்கிடந்த இந்தப்படத்துக்கு தற்போது விமோசனம் கிடைத்துள்ளது.

ஜூன் 21-ஆம் தேதி அன்று ஹவுஸ் ஓனர் படம் வெளியாகும் என்ற அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டிருந்தார் லட்சுமி ராமகிருஷ்ணன். இந்த படத்தை தமிழகம் முழுக்க பிரபல திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ்.எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் வெளியிடுகிறது.

அதாவது தமிழகம் முழுக்க தியேட்டர்கள் எடுத்து டிஸ்ட்ரிபியூஷன் அடிப்படையில் ஹவுஸ் ஓனர் படத்தை வெளியிட்டு உதவ முன்வந்துள்ளது. தற்போது அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘விஜய்-63’ படத்தை இந்நிறுவனம்தான் தயாரித்து வருகிறது.