விஜய்61 படத்துக்கு இலக்கியத்தரமான தலைப்பு

1236

தெறி படத்தை அடுத்து அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் அவரது 61ஆவது திரைப்படத்துக்கு மெர்சல் என்று ‘இலக்கியத்தரமான’ தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இராமநாராயணின் மகன் முரளி ராமசாமி தேனாண்டாள் ஸ்டுடியோஸ் லிமிடட் பேனரில் தயாரிக்கும் மெர்சல் படம் தேனாண்டாள் நிறுவனத்தின் 100வது படம்.

இந்த படத்தில் விஜய்யுடன் எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், காஜல்அகர்வால், சமந்தா, நித்யாமேனன், வடிவேல், கோவைசரளா, சத்யன் யோகிபாபு மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

சென்னையில் பிரம்மாண்டமான பல அரங்குகள் அமைக்கப்பட்டு முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன.

இப்படத்தின் உச்சகட்ட காட்சிகள் ஐரோப்பாவில் உள்ள பல நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளன.

உலகம் முழுக்க உள்ள தமிழ் மக்களால் மிக ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் தலைப்பு இன்று (21.6.17) மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்டது.

மெர்சல் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மெர்சல் என்பது சென்னையில் பேசப்படும் வார்த்தை.

அந்த வார்த்தையை வைத்து ஐ படத்தில் மெர்சலாயிட்டேன் என்ற பாடல் இடம்பெற்றது.

மெர்சலாயிட்டேன் பாடல் ஹிட்டானதை வைத்து மெர்சல் என்ற தலைப்பை தேர்வு செய்திருக்கிறார் அட்லி.

இதன் ஆடியோ வெளியீட்டுவிழாவை ஆகஸ்ட் மாதம் பிரம்மாண்டமாக நடத்த ஆயத்த வேலைகள் நடைபெற்று வருகின்றன.

ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.

ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவையும், ரூபன் படத்தொகுப்பையும், அனல்அரசு சண்டைபயிற்சியையும், விஜயேந்திரபிரசாத் மற்றும் ரமணகிரிவாசன் இருவரும் திரைக்கதையையும், ஷோபி நடனபயிற்சியையும் கவனிக்கின்றனர்.

பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை அக்டோபர் மாதம் உலகமெங்கும் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள் முரளிராமசாமியும் அவரது மனைவி ஹேமாருக்மணியும்.
தயாரிக்கிறார்கள்.

இப்படத்தை அட்லி கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்கி வருகிறார்.