தமிழ் மொழியில் வெளியாகும் எஸ்.எஸ் ராஜமௌலியின் ‘விஜயன்’

108

2007 ஆண்டு தெலுங்கில் வெளியான ‘யமதொங்கா’ எனும்  திரைப்படத்தை எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கியிருந்தார்.

ஜுனியர் என்.டி.ஆர் கதாநாயகனக நடித்திருந்த இப்படத்தில் இவருடன் குஷ்பு, ப்ரியாமணி, மம்தா மோகன்தாஸ், ரம்பா மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள்.

கதை விஜயேந்திர பிரசாத் , மரகதமணி இசையமைத்திருந்தார். கே.கே. செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

இவர்கள் அனைவரும் நான் ஈ, பாகுபலி, பாகுபலி2 ஆகிய படங்களில் பணியாற்றிய வெற்றிக்கூட்டணி.

பூலோகம் மற்றும் எமலோகத்தை கதைக்களமாக கொண்டு தெலுங்கில் மிகப்பெரிய அளவில் ஹிட்டான ‘யமதொங்கா’ திரைப்படம் 12 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் மொழியில் தற்போது டப்பிங் செய்யப்பட்டு வெளியாக உள்ளது.

ஏஆர்கே ராஜராஜா தமிழில் வசனங்களை எழுதியுள்ளார்.

இயக்குனர் எஸ்.எஸ் ராஜமௌலி இதுவரைக்கும் 11 படங்கள் இயக்கியுள்ளார்.

5 படங்கள் ரீமேக்காகவும், 2 படங்கள் மொழி மாற்றம் செய்தும், 3 படங்கள் எல்லா மொழிகளிலும் ஒரே நேரத்திலும் வெளியானது. தமிழில் வெளிவராத ஒரே படம் யமதொங்கா.

தற்பொழுது மொழிமாற்றம் செய்து தமிழில் ஓம் ஸ்ரீ சப்த கன்னியம்மன் கிரியேஷன் தயாரித்து , ஓம் ஸ்ரீ முனீஸ்வரர் மூவிஸ் வெளியிட உள்ளது.

எம்.ஜெயகீர்த்தி மற்றும் ரேவதி மேகவண்ணன் தயாரித்துள்ளனர்.

டிசம்பர் 13 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.