இரண்டாவது வாரமே இணையதளத்துக்கு வந்த வெற்றிவேல்

646

சில வருடங்களுக்கு முன்பெல்லாம், ஒரு படம் ஓடவில்லை என்றால்…

ரிலீஸ் ஆன சில மாதங்களிலேயே… அல்லது வாரங்களிலேயே…….. இந்திய தொலைக்காட்சியில்  முதன்முறையாக என்று சன் டிவியில் கத்த ஆரம்பித்துவிடுவார்கள்.

இந்த கூச்சலைக் கேட்கும்போல்லாம் அந்தப் படத்தை எடுத்தவர்கள் அவமானத்தில் கூனிக்குறுகிப்போய்விடுவார்கள்.

இப்போது இந்த அவமானமெல்லாம் சினிமாக்காரர்களுக்கு பழகிப்போயிருக்கும்.

அது மட்டுமல்ல கடந்த சில வருடங்களாக முன்னணி ஹீரோக்கள் நடித்த வெற்றிப்படங்கள் தவிர மற்ற படங்களை சாட்டிலைட் சேனல்கள் வாங்குவதில்லை.

எனவே, இந்த இடைவெளியை இட்டு நிரப்பும்வகையில் குறிப்பிட்ட ஒரு இணைய தளம் தயாரிப்பாளர்களிடம் உரிமை பெற்று திரைப்படங்களை இணையத்தில் வெளியிடுகிறது.

அந்த இணையதளத்தில் தற்போது சசிகுமார் நடித்த வெற்றிவேல் படம் வெளியாகி இருக்கிறது.

கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி அன்று சுமார் 100க்கும் குறைவான தியேட்டர்களில் வெற்றிவேல் படம் ரிலீஸ் ஆனது.

80களில் வெளிவந்திருந்தால் வெற்றிப்படமாகி இருக்கும் என்று சொல்லுமளவுக்கு அவுட்டேட்டட் படமாக இருந்ததால் வெற்றிவேல் படம் ஓடவில்லை.

பல தியேட்டர்களில் இரண்டொரு நாட்களிலேயே வெற்றிவேல் படத்தை தூக்கிவிட்டு தெறி படத்தைத் திரையிட்டனர்.

இந்நிலையில்தான், திரைக்கு வந்து இரண்டே வாரத்தில் இணையத்துக்கு வந்திருக்கிறது வெற்றிவேல்.

சசிகுமார் நடித்த சுப்பிரமணியபுரம், நாடோடிகள், சுந்தரபாண்டியன் போன்ற வெகுசில படங்கள் தவிர, அவர் நடித்த போராளி, குட்டிப்புலி, ஈசன் என பல படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக பாலாவின் இயக்கத்தில் சசிகுமார் நடித்த ‘தாரை தப்பட்டை’  படமோ இந்த ஆண்டின்  மிகப்பெரிய தோல்விப்படம்.

இந்தப் பட்டியலில் இப்போது வெற்றிவேல் படமும் சேர்ந்துள்ளது.