வெற்றிச்செல்வன் படத்துக்கு முட்டுக்கட்டை போட்ட தணிக்கைக்குழு

802

அஞ்சாதே, கோ படங்களில் கவனத்தை ஈர்த்த மலையாள நடிகர் அஜ்மல்.

தோனி படத்தில் கவனத்தை மட்டுமல்ல மனசையும் ஈர்த்தவர் ராதிகா ஆப்தே.

அஜ்மல், ராதிகா ஆப்தே இருவரும் நடிக்கும் படம் வெற்றிச் செல்வன்.

புதுமுக இயக்குநர் ருத்ரன் இப்படத்தை இயக்கி உள்ளார்.

சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட படம் இது.

படம் முடிந்து ஒரு வருடங்கள் ஆகியும் வெளிவராமல் முடங்கிக் கிடந்தது.

முட்டுக்கட்டைகளை கடந்து இம்மாதம் வெளிவரவிருக்கிறது – வெற்றிச்செல்வன்.

மென்மையான காதல் கதைதான் போன்ற தோற்றம் தந்தாலும், வெற்றிச்செல்வன் படம் உண்மையில் ஒரு பிரச்சனையை சத்தமாகப் பேசப்போகிறது.

அதாவது மனநல காப்பகத்தில் நடக்கும் முறைகேடுகள், கொடுமைகள், பாலியல் தொல்லைகளை தோலுரித்துக் காட்டப்போகிறார்களாம்.

இப்படியொரு முயற்சியில் இறங்கிய வெற்றிச்செல்வன் படத்துக்கு முதல் முட்டுக்கட்டையாக யு/ஏ சான்றிதழ் வழங்கி இருக்கிறது தணிக்கைக்குழு.

ஏன்?

“மக்கள் பிரச்னையை பேசுகிற படம் அதற்காக யு சான்றிதழ் கேட்டு போராடினோம். மருத்துவமனை கொடுமைகள் சிறுவர்கள் பார்க்க இயலாது என்று சொல்லி யு/ஏ சான்றிதழ்தான் கொடுத்தார்கள்.” என்கிறார் இயக்குநர் ருத்ரன்.

இப்படி ஒரு தணிக்கைக்குழு இருக்கும் வரை சினிமா எப்படி உருப்படும்?