சிவகார்த்திகேயன், நயன்தாராவுக்கு 50 அடியாட்கள்… – ஒரு கோடி பட்ஜெட்டில் வேலைக்காரன் விழா…

1094

சிவகார்த்திகேயன் தன்னுடைய நண்பரை பினாமியாக வைத்து அவரது பெயரில் தயாரிக்கும் படம் ‘வேலைக்காரன்’.

மோகன் ராஜா இயக்கத்தில் உருவான இந்தப் படம் டிசம்பர் 22-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

இப்படத்தில் பணியாற்றிய படக்குழுவினர்களுக்கு நன்றி கூறும் விழா என்ற பெயரில் சில தினங்களுக்கு முன் மிகப்பெரிய விருந்து நிகழ்ச்சியை நடத்தப்பட்டது.

மற்ற படங்களின் விழாக்களுக்கு வருவதை தவிர்த்து வரும் நயன்தாரா இந்த விழாவில் கலந்து கொண்டார்.

அவரை இம்ப்ரஸ் செய்வதற்காக பல லட்சம் செலவு செய்து அலங்காரவளைவு உட்பட பல செட் போடப்பட்டு படு ஆடம்பரமாக விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆட்டம் பாட்டம் தண்ணிப்பார்ட்டி என சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்த விருந்துக்கு மட்டுமே 50 லட்சத்துக்கு மேல் பணத்தை வாரியிறைத்துள்ளனர்.

இந்த நிகழ்வு திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கையில் பணம் இருக்கிறது என்பதற்காக இப்படியா ஊதாரித்தனமாக செலவு செய்வது என்று பேசாத ஆளில்லை.

அது மட்டுமல்ல, சிவகார்த்திகேயன் வெள்ளைப்பேப்பரில் கையெழுத்துப் போட்டு பைனான்சியர்களிடம் 3 சதவிகித வட்டிக்கு பணத்தை வாங்கி இப்படி வீண் செலவு செய்கின்றனரே…
பாவம் சிவகார்த்திகேயன் என்று திரையுலகினர் பரிதாபப்படுகின்றனர்.

விருந்துக்கு 50 லட்சத்தை வாரி இறைத்தவர்கள் அடுத்த ஆடம்பரத்துக்கும் தயாராகிவிட்டனர்.

வேலைக்காரன் படத்தின் பாடல்களை டிசம்பர் 3- ஆம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர்.

இந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ‘ரெமோ’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்தியதை போலவே இந்த விழாவையும் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளனர்.

தேங்க்ஸ் மீட்டுக்கே 50 லட்சம் செலவு செய்தவர்கள் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு எவ்வளவு செலவு செய்வார்கள்?

ஒரு கோடிக்கு மேல் செலவு செய்யும் திட்டத்தில் உள்ளதாக தகவல்.

ஃபஹத் ஃபாசில், பிரகாஷ்ராஜ், சினேகா, ஆர்.ஜே.பாலாஜி ஆகியோருடன் வேலைக்காரன் ஆடியோ வெளியீட்டு விழாவில் நயன்தாராவும் கலந்து கொள்கிறார். அவரை உச்சிகுளிர வைக்கத்தான் ஒரு கோடி பட்ஜெட் ஒதுக்கி வேலைக்காரன் ஆடியோ வெளியீட்டுவிழாவை நடத்த உள்ளனர்.

நயன்தாரா கலந்து கொள்ள சம்மதித்துள்ள தகவலை ரகசியமாக வைத்துள்ளனர். சர்ப்ரைஸாக நயன்தாராவை விழாமேடையில் ஏற்ற இருக்கிறார்கள்.

சிவகார்த்திகேயன், நயன்தாரா பாதுகாப்புக்காக 50 அடியாட்களை… அதாவது பவுன்சர்களை இறக்கவும் திட்டமிட்டுள்ளனர்.