‘வாஸ்கோடகாமா’ படத்தின் பூஜை

88

தமிழ்த்திரையுலக வரலாற்றில் இதுவரை இல்லாத பெருமை நிகழ்வாக சமீபத்தில் 100 விஐபிக்கள் ஒரு படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டனர். அந்தப் படம் ‘வாஸ்கோடகாமா’ ‘

நடிகர்கள் சிவகார்த்திகேயன், பார்த்திபன், ஆரியா, வெங்கட்பிரபு, பிக்பாஸ் வின்னர் ஆரி, கணேஷ் வெங்கட்ராமன் , நடிகைகள், அதுல்யா ரவி, பிரியா பிரகாஷ் வாரியர்,இயக்குநர்கள் கே. எஸ். ரவிக்குமார் போன்ற 100 பேர் விநாயகர் சதுர்த்தி அன்று அந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டனர்.

5656 புரொடக்ஷன் சார்பில் உருவாகும்  ‘வாஸ்கோடகாமா’  படத்தை மலேசியாவில் பல பெரிய நிறுவனங்கள் நடத்தும் டத்தோ பி .சுபாஷ்கரன் தயாரிக்கிறார்.

கதை திரைக்கதை எழுதி இந்தப் படத்தை  ஆர்ஜிகே எனப்படும் ஆர்.ஜி.கிருஷ்ணன் இயக்குகிறார்.

இந்தப் படத்தின் பூஜை இன்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.

இப்பூஜையில் சிறப்புவிருந்தினராக இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார், தயாரிப்பாளர்கள் ஜி.தனஞ்செயன் , கே.ராஜன் ஆகியோர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.

இந்நிகழ்வில் படத்தின் தயாரிப்பாளர் டத்தோ பி. சுபாஷ்கரன் , இயக்குநர்  ஆர்.ஜி.கிருஷ்ணன்,நாயகன் நகுல் ,இசை அமைப்பாளர் என்.வி .அருண் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

படத்தைப் பற்றி இயக்குநர் ஆர்.ஜி.கிருஷ்ணன் …

“குரங்கிலிருந்து வந்த மனிதன் படிப்படியாக நாகரிக வளர்ச்சி அடைந்தான். இன்னும் எதிர்காலத்தில் என்னவாக ஆவான்? அவனது மனநிலையும்  குணம் இன்னும் சில நூறு ஆண்டுகளுக்குப்பின் எப்படி மாறும் என்பதை   சொல்லும் படம்தான் ‘வாஸ்கோடகாமா’.

இப்படத்தின் கதாநாயகனாக நகுல் நடிக்கிறார். கதை பிடித்துப்போய் விட்டது.உடனே சம்மதம் கூறியுள்ளார்.

இயக்குநர் கே. எஸ். ரவிக்குமார், ஆனந்தராஜ், முனிஸ்காந்த் போன்ற பரிச்சயமான நட்சத்திரங்களும் படத்தில் உள்ளனர். ” என்கிறார் இயக்குநர்.

படத்திற்கு ஒளிப்பதிவு வாஞ்சிநாதன், இவர்  ‘நான் சிரித்தால் ‘ போன்று சில படங்களில் ஒளிப்பதிவு  செய்துள்ளவர். இசை என்.வி. அருண். இவர் எஸ்பிபி கடைசியில் பாடிய பாடலான பாடல் இடம்பெற்ற ‘என்னோட பாட்ஷா’ என்கிற ஆல்பத்திற்கு  இசையமைத்தவர்.

சண்டைக்காட்சிகள்- விக்கி .இவர் ‘உறியடி’ , ‘சூரரைப்போற்று’ படங்களுக்கு சண்டைக்காட்சிகள் அமைத்தவர்.கலை இயக்கம்- ஏழுமலை.  எடிட்டிங் தமிழ்க்குமரன் .இவர் ஏராளமான குறும்படங்களுக்குப் படத்தொகுப்பு செய்தவர்.

படத்தில் 4 பாடல்கள் உள்ளன. நடனக்காட்சிகளை பிக்பாஸ் புகழ்  நடன இயக்குநர் சாண்டி அமைக்கிறார்.

படப்பிடிப்பு சென்னையிலும் சென்னையின் சுற்றுப் பகுதிகளிலும் நடைபெற உள்ளது