யுவன் சங்கர் ராஜாவின் காதலர் தின பரிசு

yuvan yakkai

பல்வேறு உணர்வுகளை தனது இசையால் ரசிகர்களுக்கு பாடல் வடிவம் மூலம் தரும் யுவன் ஷங்கர் ராஜா இந்த வருடத்தின் முதல் வெளியீடாக கிருஷ்ணா- ஸ்வாதி நடிப்பில் குழந்தை வேலப்பன், இயக்கத்தில், Prim Pictures தயாரிப்பில் உருவாகும் யாக்கை படத்தின் ஒற்றைப் பாடல் ஒன்றை வெளியிடுகிறார்.

பல்வேறுப் பாடல்களை தனதுக் குரலில் பாடி இளம் நெஞ்சங்களைக் குளிர்வித்த யுவன் இப்பொழுது ‘ நீ’ என்று துவங்கும் இந்தப் பாடலை காதலர் தினத்தை ஒட்டி நாளை வெளியிட உள்ளார்.

இசை நிறுவனம் ஒன்றை U 1 என்ற பெயரில் தொடங்கி உள்ள யுவன் ஷங்கர் ராஜா தனது ரசிகர்களுக்கு மட்டுமின்றி இசையை விரும்பும் எல்லோரையும் ‘நீ’ பாடல் மூலம் கவர உள்ளார்.