வைரமுத்துக்கு தேசிய விருது வாங்கி தந்த பாடல்… Comments Off on வைரமுத்துக்கு தேசிய விருது வாங்கி தந்த பாடல்…

எந்த பக்கம் காணும் போதும் வானம் ஒன்று
நீ எந்த பாதை ஏகும்போதும் ஊர்களுண்டு
ஒரு காதல் தோல்வி காணும்போதும் காதலுண்டு
சிறு கரப்பான் பூச்சி தலை போனாலும் வாழ்வதுண்டு

அட ரோஜா பூக்கள் அழுதால் அது தேனை சீந்தும்
என் ராஜா பையன் நீ அழுதால் அதில் ஞானம் மீஞ்சும்
உன் சோகம் ஒரு மேகம் நான் சொன்னால் அது போகும்
உன் கண்ணீர் ஏந்தும் கன்னம் நானாகும்
எந்த பக்கம் காணும் போதும் வானம் ஒன்று
நீ எந்த பாதை ஏகும்போதும் ஊர்களுண்டு

அப்பொதுமே இன்பம் என்றால்
முன்னேற்றமே ஏது
எப்பொதுமே பகலாய் போனால்
வெப்பம் தாங்காது
மனசை சலவை செய்ய‌
ஒரு கண்ணீர் கதி தான் உண்டு
உன் உயிரை சலவை செய்ய‌
ஒரு காதல் க‌தி உண்டு
உன் சுவாசப்பையை மாற்று
அதில் சுத்த காற்றை ஏற்று
நீ இன்னோர் உயிரில்
இன்னோர் பெயரில் வாழ்ந்து விடு

ஒ… ஒஒ…

சந்தர்ப்பமே தீமை செய்தால் சந்தோசமே ஏது
சல்லடையில் தண்ணீர் அள்ளி தாகம் தீராது
தாகம் தீரத்தானோ நீ தாய்பால் மழையாய் வந்தாய்
நம் உறவின் பெயரே தெரியாதம்மா உயிரை தருகின்றாய்
உன் உச்சந்தலையை தீண்ட‌ ஓர் உரிமை உண்டா பெண்ணே
உன் உள்ளங்காலில் தலையை சாய்த்தால் போதும் கண்ணே
ஒ… ஒஒ…
எந்த பக்கம் காணும் போதும் வானம் ஒன்று
நான் எந்த பாதை ஏகும்போதும் ஊர்களுண்டு
நீ தாவி தாவி தழுவும்போதும் தாய்மை உண்டு
நான் நெஞ்சாங்கூட்டில் சாயும்போதும் நேர்மை உண்டு
உன் வார்த்தைக்கு முன்னால்
என் வாழ்வே உன் பின்னால்
உன் மடியில் எந்தன் கண்ணீர் வழியுமடி
உன் சோகம் ஒரு மேகம்
நான் சொன்னால் அது போகும்
உன் கண்ணீர் ஏந்தும் கன்னம் நானாகும்

Previous ArticleNext Article

Editor Picks

Read previous post:
பாகுபலி புண்ணியத்தில் பாலிவுட்டுக்குப் போகிறார் பிரபாஸ்

Close