சந்தானம் நடித்த படத்தைப் பாக்காதீங்க – ரசிகப்பெருமக்களுக்கு வடிவேலு வேண்டுகோள்

Jaggajala Pujabala Tenaliraman (2)

சந்தானத்துக்கும் வடிவேலுவுக்கும் ஏற்கனவே ஏழாம் பொருத்தம்.

கவுண்டமணியிடம் வடிவேலு பெயரைச் சொன்னால் எப்படி கடுப்பாகி கத்துவாரோ…அப்படித்தான் சந்தானம் பெயரைச் சொன்னால்  வடிவேலுவின் ரியாக்ஷனும்.

வடிவேலு உச்சத்தில் இருந்தபோது நடித்த, ரெண்டு படத்தில்  இன்னொரு காமெடியனாக சந்தானத்தை நடிக்க வைத்தார் இயக்குநர் சுந்தர்.சி.

அதை மாபெரும் குற்றமாக எண்ணி தன் ஆஸ்தான இயக்குநரான சுந்தர்.சியையே தூக்கி எறிந்தார். இனி அவரது படத்தில் நடிக்க மாட்டேன் என்று சூளுரைத்தார்.

அப்படிப்பட்ட வடிவேலு சில வருடங்களாக வீட்டில் உட்கார்ந்திருக்கிறார். அவர் இடத்தில் இப்போது சந்தானம்.

இதை அவரால் ஜீரணிக்க முடியுமா?

இப்போது உள்ள காமெடி சகிக்கவில்லை. குடும்பத்தோடு பார்க்க முடியாத அளவுக்கு ஆபாசமாக இருக்கிறது. எனவே உங்கள் வீட்டுப் பெண்களை சினிமா பார்க்க, அதாவது சந்தானத்தின் காமெடியைப் பார்க்க அனுப்பாதீர்கள் என்ற ரீதியில் ஒரு பத்திரிகைக்கு பேட்டியளித்திருக்கிறார் வடிவேலு.

அதைப் படித்த சந்தானம் கடுப்பாகிவிட்டாராம். தன் அல்லக்கைகளுடன் சேர்ந்து சரக்கு அடித்தபடி வடிவேலுவை வாய்க்கு வந்தபடி  கழுவி கழுவி ஊற்றி இருக்கிறார் சந்தானம்.

ஆரம்பிச்சுட்டாங்கய்யா…