வடிவேலுவின் அடுத்த அதிரடி திட்டம்

48

ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு நடிப்பில் வெளியான படம் ‘இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி’.

சூப்பர் ஹிட்டான இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க முடிவெடுக்கப்பட்டது.

இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் உருவாக இருந்த இந்த படத்தில் மீண்டும் வடிவேலுவே கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

5 கோடி சம்பளம் பேசப்பட்டு 1 கோடி அட்வான்ஸ் கொடுக்கப்பட்டு இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி’படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் நடந்த நிலையில் வடிவேலுவுக்கும் இயக்குநருக்கும் இடையில் பிரச்சனைகள் ஏற்பட்டது.

கதையில் அநியாயத்துக்கு தலையிட்ட வடிவேலு, உச்சகட்டமாக தான் சொல்லும் ஒளிப்பதிவாளரையும் இணை இயக்குநரையும் கமிட் பண்ணினால்தான் நடிப்பேன் என்று அடம் பிடித்தார்.

அதற்கு இயக்குநர் சிம்புதேவன் உடன்படவில்லை. எனவே இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி’படத்திலிருந்து விலகினார் வடிவேலு.

இதனை தொடர்ந்து இந்த பிரச்சனையை தயாரிப்பாளர் சங்கத்திற்கு கொண்டு சென்றார் தயாரிப்பாளர் ஷங்கர். ஆனாலும் பட பிரச்சனை முடிவுக்கு வரவில்லை. இந்நிலையில் காமெடி நடிகரும், தி.மு.க. பிரமுகருமான பூச்சி முருகன் மூலம் தி.மு.க. தலைவர் ஸ்டாலினிடம் இந்தப்பட பிரச்சனையை கொண்டு செல்ல திட்டமிட்டுள்ராம் வடிவேலு.