அன்று அடாவடிவேலு… இன்று அடங்கி ஒடுங்கிய வடிவேலு….

651

சுமார் ஆறேழு வருடங்களுக்கு முன் முன்னணி காமெடியனாக இருந்தபோது, ரஜினி, கமல், அஜித், விஜய் என அத்தனை பேரையும் பகைத்துக் கொண்டார் வடிவேலு.

ஹீரோக்களுக்கு  தரும்  முக்கியத்துவத்தைவிட எனக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும் என்று டைரக்டர்களை டார்ச்சர் பண்ணினார்.

இந்த விஷயத்தை அறிந்த முன்னணி ஹீரோக்கள்  மெல்ல மெல்ல  வடிவேலுவை ஒதுக்கினார்கள்.

அதனால்  ஒரு கட்டத்தில் கையில் படங்களே இல்லாதுபோய்,  மார்க்கெட் இழந்து வீட்டில் உட்கார்ந்தார்.

கடந்து 5 வருடங்களுக்கு மேலாக வீட்டில் உட்கார வைக்கப்பட்ட வடிவேலு இடையில்  தெனாலிராமன் போன்ற  ஒரு சில படங்களில் கதாநாயகனாக நடித்தார்.

அவரை ஹீரோவாக வைத்து படம் எடுத்தவர்கள் பலத்த நஷ்டமடைந்தார்கள்.

இந்நிலையில், இப்போது மீண்டும் காமெடி கேரக்டர்களில் நடிக்க துவங்கியுள்ளார் வடிவேலு.

விஷால் கதாநாயகனாக நடிக்கும் ‘கத்திசண்டை’படத்தில் காமெடியனாக நடித்துள்ளார் வடிவேலு.

ஆனால் படம் முழுக்க வருவதுபோல் இல்லை. ஒரு பாதி கதையில் மட்டுமே வடிவேலு. மறுபாதியில் சூரி நடித்திருக்கிறார்.

அடுத்து அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் படத்திலும் காமெடியனாக நடிக்கவிருக்கிறார்.

விஜய் நடிப்பில் வெளியான ப்ரண்ட்ஸ், ‘போக்கிரி’ ‘வில்லு’, ‘சுறா’, ‘காவலன்’ ஆகிய படங்களில் விஜய்யுடன் நடித்துள்ளார் வடிவேலு.

படப்பிடிப்பில் டைரக்டரை டார்ச்சர் பண்ணக்கூடாது என்ற கண்டிஷன் அடிப்படையிலேயே மீண்டும் தன்னுடன் இணைய ஒப்புதல் கொடுத்தாராம் விஜய்.

தற்போதைய நிலவரத்தை புரிந்து கொண்டு தன்னுடைய அடாவடித்தனத்தை குறைத்துக் கொண்டு, அடங்கி ஒடுங்கித்தான் கத்தி சண்டை படப்பிடிப்புக்கு வந்தாராம்.