வடிவேலுவுக்கு மீண்டும் 5 வருடங்கள் வனவாசம்….!

673

கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த சிரிப்பு நடிகர் வடிவேலு, வாய்க்கு வந்தபடி தரக்குறைவாகப் பேசினார்.

சினிமா நடிகனை பார்க்கும் ஆவலில் மக்கள் கூடிய கூட்டத்தைப் பார்த்ததும் அடுத்தது தி.மு.க. ஆட்சிதான் என்று தப்புக்கணக்குப் போட்ட வடிவேலு, மேலும் ‘உற்சாகத்தை’ ஏற்றிக் கொண்டு விஜயகாந்தையும், ஜெயலலிதாவையும் விளாசினார்.

நடந்ததோ வேறு.

அ.தி.மு.க. ஆட்சியைப் பிடித்தது.

விஜயகாந்த் எதிர்கட்சித்தலைவர் ஆனார்.

வடிவேலு வால் ஆட்டிய தி.மு.க. படு தோல்வியடைந்தது.

ஜெயலலிதாவை எதிர்த்த வடிவேலுவுக்கு வாய்ப்பு கொடுக்க படத்துறையினர் பைத்தியக்காரர்களா?

கடந்த 5 வருடங்களாக வடிவேலுவை வீட்டில் உட்கார வைத்தனர்.

தற்போது நடைபெற்று முடிந்த தேர்தலில் தி.மு.க. வெற்றியடையும் என்ற நம்பிக்கையில் தன்னுடைய அடுத்த இன்னிங்ஸை ஆரம்பிக்க ஆவலோடு காத்திருந்தார் வடிவேலு.

அவரது நம்பிக்கைக்கும்… விருப்பத்துக்கும் மாறாக மீண்டும் அ.தி.மு.க. வெற்றியடைந்துவிட்டது. மீண்டும் ஜெயலலிதா முதல்வர்.

எனவே, வடிவேலுவுக்கு மீண்டும் 5 வருடங்கள் வனவாசம்தான்.

இதையும் மீறி வடிவேலுவுக்கு யாராவது வாய்ப்பு கொடுத்தால், அந்தப் படத்துக்கு வரிவிலக்கு கிடைக்காது என்பது மட்டுமல்ல, வேறுபல பிரச்சனைகளும் வரும் என்பதை சொல்லணுமா என்ன?

இந்த தேர்தலில் ஜெயலலிதா மாட்டார் என்ற நம்பிக்கையில் விஷால் நடிக்கும் கத்தி சண்டை படத்தில் வடிவேலுவுக்கு சான்ஸ் கொடுத்திருக்கிறார்கள்.

அந்தப் படத்தோட கதி என்னாகப்போகுதோ…