ஏன் தனுஷுக்கு இவ்வளவு பதட்டம்?

80

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், ஆண்ட்ரியா, அமீர், சமுத்திரக்கனி, ஐஸ்வர்யா ராஜேஷ், கிஷோர் முதலானோர் நடித்து கடந்த ஆண்டு வெளியான படம் ‘வட சென்னை’.

இந்த படத்தை ஆரம்பிக்கும்போதே இந்த படத்தை இரண்டு பாகமாக எடுக்க இருப்பதாக பில்ட்அப் கொடுத்தனர்.

‘வட சென்னை’ படம் வெளியான பிறகும்கூட இதே பில்ட்அப்பை தொடர்ந்துனர். ஒருகட்டத்தில் வட சென்னை- 2 படத்திட்டத்தை கைவிட்டுவிட்டனர்.

வட சென்னை படத்தில் நடித்த இயக்குநர் அமீரின் பகுதியை மட்டும் தனியாக தொகுத்து ராஜன் பரம்பரை என்ற பெயரில் வெப்சீரியாக உருவாக்க திட்டமிட்டனர். பிறகு அதையும் கைவிட்டனர்.

இதற்கிடையில் இயக்குனர் வெற்றிமாறனும், தனுஷும் இணைந்து ‘அசுரன்’ படத்தை உருவாக்கி வருகிறார்கள்.

இந்நிலையில் ‘வட சென்னை’ படத்தின் இரண்டாம் பாகம் கைவிடப்பட்டதாக ஊடங்களில் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வந்தன. தொடர்ந்து இதுபோன்ற செய்திகள் வந்துகொண்டிருப்பதால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகர் தனுஷ் ட்விட்டர் மூலம் சமீபத்தில் ஒரு விளக்கத்தை அளித்தார்.

அதில், ‘‘வட சென்னை-2’ படம் சம்பந்தமாக வரும் செய்திகளால் ரசிகர்கள் குழப்பமடைய வேண்டாம். அதுபோன்ற தகவல்களை எனது ரசிகர்கள் நம்ப வேண்டாம். நான் என்னுடைய அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்படும் செய்தியே சரியானதாகும்! ‘வட சென்னை-2’ திரைப்படம் நிச்சயம் உருவாகும்’’ என்று தனுஷ் அதில் பதிவிட்டார்.

தனுஷ் இப்படியொரு இந்த விளக்கத்தை அளிக்க வேண்டிய அவசியம் என்ன? பொதுவாகவே அதிகாரபூர்வ தகவல் வெளிவருவதற்கு முன் ஊடகங்களில் பல செய்திகள் வருவது இயல்பான ஒன்றுதான்.

வடசென்னை 2 பற்றிய செய்தியும் அப்படித்தான். அதற்கு ஏன் தனுஷ் இவ்வளவு பதட்டப்பட வேண்டும்?

வடசென்னை 2 படத்தின் பெயரில் பல கோடி பைனான்ஸ் வாங்கியுள்ளார் தனுஷ். அந்தப்படம் ட்ராப் என்று தொடர்ந்து செய்திகள் வெளியானதால் பணம் கொடுத்த பைனான்சியர்கள் அவரை நெருக்க ஆரம்பித்துள்ளனர். அதன் காரணமாகவே ட்விட்டரில் பொங்கியுள்ளார் தனுஷ்.