கொடுத்து வைத்த நந்திதா…. பாராட்டிய ஜோதிகா…

832


36 வயதினிலே படத்தின் மூலம் ரசிகர்கள் மனதை மட்டுமல்லாமல் பாக்ஸ் ஆஃபிசையும் மீண்டும் ஆட்கொண்ட ஜோதிகா இயக்குனர் ராதா மோகனின் ‘உப்பு கருவாடு’ திரைப்படத்தின் டீசரை வெளியிட்டார்.

அழகிய தீயே படம் தொடங்கி, மொழி, அபியும் நானும், பயணம், கவுரவம் என ஒவ்வொரு படத்தையும் அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் எடுப்பவர் இயக்குனர் ராதா மோகன்.
இவரது அடுத்தப்படம் – உப்பு கருவாடு.

தற்போது படப்பிடிப்பு முடிந்து வெளி வர தயாராக உள்ள உப்பு கருவாடு திரைப்படத்தின் டீசரை படக்குழுவினர் முன்னிலையில் அவரது ‘மொழி’ படத்தின் நாயகி ஜோதிகா வெளியிட்டார்.

டீசரை பார்த்த ஜோதிகா,“ குடும்பத்துடன் பார்த்து ரசிக்க கூடிய நல்ல பொழுதுபோக்கு திரைப்படத்தை எடுத்திருப்பதற்கு இயக்குனர் ராதா மோகன் அவர்களுக்கு எனது வாழ்த்துகள்.

‘மொழி’ போல் உப்பு கருவாடு திரைப்படமும் ராதா மோகனுக்கு முக்கியமான திரைப்படமாக அமையும். இப்படத்தில் நந்திதா நடித்திருப்பது போலான கதாப்பாத்திரம் எந்த ஒருக் காலக் கட்டத்திலும் எல்லா கதாநாயகிகளுக்கும் கிடைப்பதில்லை. அந்த வகையில் நந்திதா கொடுத்து வைத்தவர்தான்.”

என ‘உப்பு கருவாடு படத்தை பற்றியும் , இயக்குனர் ராதா மோகன் பற்றியும் நாயகி நந்திதா பற்றியும் மனமார புகழ்ந்துப் பாராட்டினாராம் ஜோதிகா.

“அபியும் நானும், மொழி படங்களில் இருந்த முதன்மை பெண் கதாப்பாத்திரங்களை யாரும் மறக்கமாட்டார்கள் அத்தகைய கதாப்பாத்திரங்களை உருவாக்கிய இயக்குனர் ராதா மோகன் அவர்களுடன் பணிபுரியக்கிடைக்கும் வாய்ப்பை தவற விடுவதில்லைஎன்ற எண்ணத்தில்தான் இப்படத்தில் நடித்திருகிறேன்.

ஜோதிகா அவர்களை பார்க்கும்வரை மிகவும் பரபரப்பாய் இருந்தது. அவர் எங்களை வரவேற்ற விதமும், பேசிய விதமும் என்னை வியப்பில் ஆழ்த்தியது. அவரே எங்களது படத்தின் டீசரை வெளியிட்டது கூடுதல் மகிழ்ச்சியைத் தந்துள்ளது. டீசரை பார்த்து மிகவும் ரசித்தார் படத்தை பார்க்க ஆர்வமாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

என்னைப் பற்றியும், எனது படங்களை பற்றியும் குறிப்பாக ‘உப்பு கருவாடு’ படத்தை பற்றியும் அவர் பாராட்டியதை என்னால் மறக்கவே முடியாது .”

என உற்சாகத்துடன் கூறுகிறார் படத்தின் கதாநாயகி நந்திதா.