உன்னோடு கா படத்தில் கதாநாயகியான துணை நடிகை…

644

நான்  மகான் அல்ல, 7ஆம் அறிவு, முகமூடி மற்றும் ராஜா ராணி போன்ற  பல படங்களில் துணை வேடங்களில் நடித்த மிஷா கோஷல் ‘உன்னோடு கா’  என்ற படத்தில்  கதாநாயகி நடிக்கிறார்.

ஆர்.கே. இயக்கி, சி சத்யா இசையமைக்கும்  இந்த படத்தை அபிராமி ராமநாதன் தயாரிக்கிறார்.

ஆரி, பால சரவணன், மாயா உள்ளிட்டோர் நடிக்கும் இந்த படத்தில் பிரபு மற்றும் ஊர்வசி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.

துணை வேடத்தில் நடித்த மிஷா கோஷல் ‘உன்னோடு கா’  படத்தில்  கதாநாயகியாக நடிப்பதை  எண்ணி மகிழ்வின் உச்சத்தில் இருக்கிறார்.

“இயக்குனர் ஆர் கே புதியவராக இருந்தாலும் ஒரு அனுபவம் வாய்ந்த இயக்குனர் போலவே பணியாற்றுகிறார். குறுகியக்  காலத்தில் திட்டமிட்டப் படியே படப்பிடிப்பை முடித்து விட்டார்.

இசை அமைப்பாளர் சத்யா அருமையாக இசை அமைத்து இருக்கிறார்.

வரும் 21ஆம் தேதி நடைபெற இருக்கும் படத்தின் இசை வெளியீட்டு விழா என் வாழ்வில் மிக முக்கியமான நாளாக அமையும்.

படத்தில் நான் நடிக்க மட்டும் செய்யாமல் உதவி இயக்குனராகவும் பணி ஆற்றியது மன திருப்தியை தருகிறது.

என்னோடு இணைந்து நடித்த ஆரி, மாயா மற்றும் பால சரவணன் ஆகியோர் எனக்கு சிறந்த நண்பர்களாக திகழ்ந்ததோடு மட்டுமில்லாமல் என்னை மேன்மேலும் வளர்த்து கொள்ள உதவினர்.

பால சரவணனின் காமெடி சென்சுற்கு இணை எதுவும் இருக்க முடியாது, அவருடைய டைமிங் காமெடியால் நான் சில காட்சிகளில் வாய் விட்டு சிரித்துவிட்டேன்,” என்று புன்னகையுடன் சொல்கிறார் மிஷா கோஷல்.

‘உன்னோடு கா’ திரைப்படம் நிச்சயமாக மிஷாவின் பாதையில் ஒரு திருப்பு முனையாக அமையும் என எதிர்ப்பார்க்கலாம்.