ரீமேக் செய்ய தகுதியான படமாம் ‘உள்குத்து’

IMG (42)

‘திருடன் போலீஸ்’, ‘ஒரு நாள் கூத்து’  திரைப்படங்களை தயாரித்த ‘கெனன்யா பிலிம்ஸ்’  தயாரிக்கும் மூன்றாவது திரைப்படம்  ‘உள்குத்து’.

அட்டக்கத்தி தினேஷ்  ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில்  நந்திதா கதாநாயகியாக நடிக்கிறார்.

மற்றும் ஸ்ரீமன், பால சரவணன், ஷரத் லோகிதஸ்வா, திலீப் சுப்பராயன், ஜான் விஜய், சாயாசிங், முத்துராமன், செஃப் தாமோதரன், மிப்பு சாமி, கதிர், ஃப்ரின்ஸ், ஜெயவாணி மற்றும் மூணார் ரமேஷ் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும் உள்குத்து படத்தை  இயக்கி இருக்கிறார் கார்த்திக் ராஜு.

இந்நிறுவனம் தயாரித்த ஒரு நாள் கூத்து படத்துக்கு இசையமைத்த ஜஸ்டின் பிரபாகரன் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

ஒளிப்பதிவாளர் பி கே வர்மா, படத்தொகுப்பாளர் கே எல் பிரவீன், ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன், கலை இயக்குனர் விதேஷ் என பல வலுவான தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்புடன்  உருவாகி வருகிறது – உள்குத்து.

சமீபத்தில் உள்குத்து படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

பேசுவதற்கே கூச்சப்பட்டு பயந்து நடுங்கும் அட்டகத்தி தினேஷ் இந்தப்படம் பற்றி சரளமாகபேசியது ஆச்சர்யம்.

“உள்குத்து திரைப்படம் என்னுடைய திரைப்பட வாழ்க்கையில் மட்டுமின்றி கதாநாயகி நந்திதாவின் திரைப்பட வாழ்க்கையிலும்  முக்கியமான மைல் கல்லாக இருக்கும். ஒவ்வொரு காட்சியையும் அற்புதமாக உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் கார்த்திக் ராஜு. படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கு எந்த விதத்திலும் சுவாரசியத்திற்கு பஞ்சம் இருக்காது…’’ என்று நம்பிக்கையுடன் பேசினார் தினேஷ்.

“உள்குத்து திரைப்படம் மீனவர்களை சார்ந்த கதை அல்ல.  மீன் வெட்டும் தொழிலாளர்களைப் பற்றிய கதை. மீன் வெட்டும் தொழிலாளரான தினேஷின் உள்குத்து என்ன என்பதே  உள்குத்து படத்தின் கதை.” என்ற தயாரிப்பாளர் ஜெ செல்வகுமார், “நிச்சயமாக பிற மொழிகளில் ரீமேக் செய்ய தேவையான அனைத்து சிறப்பம்சங்களும் உள்குத்து படத்திற்கு இருக்கிறது…” என்று அழுத்தம் திருத்தமாக சொன்னார்.

ரீமேக் ரைட்ஸில் செமத்தியாய் சில்லறை பார்த்துவிடலாம் என்ற திட்டத்தில் இருக்கிறாரோ?