அமைச்சர்களுக்கு உதயநிதி போட்ட உத்தரவு…

30

தேர்தல் நேரத்தில் அடிக்கடி காதில் விழும் வார்த்தை… தொகுதி பங்கீடு.

தொகுதி பங்கீடு என்பது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்குவதை குறிப்பதுதான்.

என்றாலும், வெளியே தெரியாத இன்னொரு தொகுதி பங்கீடும் உண்டு.

அது என்ன தெரியுமா?

கட்சிகளின் முக்கிய தலைவர்கள், கட்சித் தலைமையிடம் சிபாரிசு செய்து தங்களுடைய ஆதரவாளர்களுக்கு தேர்தலில் போட்டியிட சீட் வாங்கிக் கொடுப்பார்கள்.

அண்மையில் நடந்துமுடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட பல பேர் விருப்பமனு கொடுத்தார்கள்.

ஆனாலும், இரண்டாம் கட்டத்தலைவர்களாலும் மாவட்ட செயலாளர்களாலும் சிபாரிசு செய்யப்பட்டவர்களுக்கே திமுக சார்பில் போட்டியிடுவதற்கு சீட் கொடுக்கப்பட்டதாக அப்போது சொல்லப்பட்டது.

முக்கியமாக, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சிபாரிசு செய்த அனைவருக்குமே சீட் கொடுக்கப்பட்டது என்று அரசியல்வட்டாரத்தில் பேசப்பட்டது.

தற்போது அமைச்சர்களாக இருக்கும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மூர்த்தி உட்பட பல பேர் உதயநிதியின் சிபாரிசுதான்.

தன்னுடைய சிபாரிசில் சீட் பெற்று, தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று, தற்போது எம்எல்ஏக்களாகவும் அமைச்சர்களாகவும் இருப்பவர்கள் சிறு தவறுகூட செய்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறாராம் உதயநிதி.

அதனால் அவர்களை ரகசியமாக கண்காணிக்கவும் ஒரு ஏற்பாட்டை செய்து வைத்திருக்கிறார் என்று கோட்டைவட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.

குறிப்பாக தன்னுடைய சிபாரிசில் அமைச்சர்களாக இருப்பவர்கள் மீது எந்தவிதமான ஊழல்குற்றச்சாட்டுகளும் வரக்கூடாது என்பதில் மிகவும் கவனமாகவும் கண்டிப்புடனும் இருக்கிறாராம் உதயநிதி.

தன்னால் அமைச்சர் பதவியை அலங்கரிக்கும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி உட்பட உதயநிதியின் ஆதரவு அமைச்சர்களுக்கு கடுமையான உத்தரவைப்போட்டிருக்கிறாராம்.

அதாவது உங்களுடையதுறையில் சட்டத்துக்குப் புறம்பாக யாருக்கும் எந்த சலுகையும் காட்டக் கூடாது, யாருடைய சிபாரிசுக்கும் அடிபணியக்கூடாது, டெண்டர் போன்ற விஷயங்களில் கமிஷன் கட்டிங் என்ற பேச்சே இருக்கக்கூடாது என்று கடுமையான உத்தரவுகளை போட்டிருக்கிறார் உதயநிதி.

தன்னுடைய குடும்பத்தை சேர்ந்தவர்களே சிபாரிசுக்கு வந்தாலும் அவர்களுக்காக எவ்வித சலுகையும் காட்டக்கூடாது என்று கண்டிப்பாக சொன்னாராம்.

என்னுடைய பேச்சை மீறி, நீங்கள் ஏதாவது தவறு செய்து, அது என்னுடைய கவனத்துக்கு வந்தால் உங்களை நான் மன்னிக்க மாட்டேன். அமைச்சர் பதவியிலிருந்து நீக்கிவிடுவேன் என்று கர்ஜனை செய்திருக்கிறார் உதயநிதி.

அவர் சொன்னதைக் கேட்டு அவரால் அமைச்சர் பதவிக்கு வந்தவர்கள் ஆடிப்போயிருக்கிறார்களாம்.

அதுமட்டுமல்ல, உதயநிதி இப்படி எல்லாம் ஸ்டிரிக்ட் ஆஃபிசராக இருப்பார் என்று தெரிந்திருந்தால் தேர்தலில் போட்டியிடுவதற்கு அவரிடம் சீட்டே கேட்டிருக்க மாட்டேன் என்ற புலம்புகிறார்களாம்.

 

You can watch on youtube: